என் மலர்
செய்திகள்

லெனோவோ தின்க்பேட் லேப்டாப்கள் அறிமுகம்
லெனோவோ நிறுவனத்தின் தின்க்பேட் லேப்டாப் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. லெனோவோ நிறுவனத்தின் முதல் பிஸ்னஸ் ரக லேப்டாப்கள் சார்ந்த முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
புதுடெல்லி:
லெனோவோ நிறுவனத்தின் புதிய தின்க்பேட் லேப்டாப்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தின்க்பேட் A275 மற்றும் தின்க்பேட் A475 மாடல்கள் அந்நிறுவனத்தின் முதல் பிஸ்னஸ் ரக மாடல்கள் ஆகும். இவை AMD ப்ரோ பிராசஸர்களை கொண்டு இயங்குகிறது. இவை மல்டி-டால்கிங் மற்றும் வன்பொருள் தரத்தை மேம்படுத்தும் திறன் கொண்டுள்ளது.
புதிய தின்க்பேட் சாதனங்களின் விலை லெனோவோ தின்க்பேட் A275 விலை 869 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.55,500 மற்றும் A475 மாடல் 849 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.54,200 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஏழாம் தலைமுறை AMD ப்ரோ A12 பிராசஸர்கள் தவிர இவை ரேடியான் R7-கிளாஸ் கிராஃபிக்ஸ் கொண்டுள்ளது. லெனோவோ தின்க்பேட் A275 மற்றும் தின்க்பேட் A475 மாடல்களில் முறையே 12.5 மற்றும் 14.0 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இதன் பேஸ் மாடலில் 1600x900 பிக்சல் TN பேனல், மற்றும் 1920x1080 பிக்சல் ஃபுல்-எச்டி IPS டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.

இரண்டு தின்க்பேட் மாடல்களிலும் 16 ஜிபி அளவு DDR4 ரேம் வசதியும், மெமரியை 512 ஜிபி அல்லது 1000 ஜிபி கொண்டுள்ளது. A275 மாடல் 1.3 கிலோ எடை மற்றும் A475 மாடல் 1.6 கிலோ எடை கொண்டுள்ளது. இந்த லேப்டாப்களில் கைரேகை ஸ்கேனர், மற்றும் விண்டோஸ் ஹெல்லோ பயோ ஆத்தென்டிகேஷன் வழங்கப்பட்டுள்ளது.
கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை LTE-A மொபைல் பிராட்பேண்ட், வைபை, ப்ளூடூத் 4.1, இரண்டு யுஎஸ்பி 3.0 டைப் ஏ போர்ட், ஒரு யுஎஸ்பி டைப் சி கனெக்டர், எச்டிஎம்ஐ அவுட்புட், ஜிகாபிட் ஈத்தர்நெட் ஜேக், கார்டு ரீடர், ஹெட்போன் போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் இரண்டு மாடல்களிலும் 10 மணி நேர பேட்டரி பேக்கப் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லெனோவோ தின்க்பேட் A275 மற்றும் A475 நோட்புக் சாதனங்களை தவிர லெனோவோ நிறுவனத்தின் தின்க்சென்டர் M715 டவர் மற்றும் ஸ்மால் ஃபார்ம் ஃபேக்டர் மாடல்களும், M715 சீரிஸ் மாடல்களில் AMD ப்ரோ அல்லது ரைசன் ப்ரோ பிராசஸர்கள் வழங்கப்பட்டுள்ளது.

Next Story