என் மலர்
செய்திகள்

ரிலையன்ஸ் ஜியோபோன்: இதெல்லாம் தெரிந்தால், வாங்குவீர்களா?
ரிலையன்ஸ் நிறுவனத்தின் 4ஜி வோல்ட்இ வசதி கொண்ட பீச்சர் போன் ஜியோபோன் என அழைக்கப்படுகிறது. சமீபத்தில் அறிமுகமான ஜியோபோன் சார்ந்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவற்றை தொடர்ந்து பார்ப்போம்.
மும்பை:
ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி 4ஜி வசதி கொண்ட ஜியோபோனினை அறிமுகம் செய்தார்.
அனைவரின் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக புதிய ஜியோபோன் அனைவருக்கும் இலவசமாக வழங்குவதாகவும், இதனை வாங்குவோர் திரும்ப செலுத்தக் கூடிய வகையில் ரூ.1500 செலுத்த வேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு பின் இந்த தொகை திரும்ப வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய ஜியோபோன் சிறப்பம்சங்கள் விரிவாக அறிவிக்கப்படாத நிலையில், இந்த பீச்சர்போன் வாங்குவோர் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

ஜியோபோன் சிம் லாக்:
ஜியோபோனில் ஜியோ சிம் மட்டும் தான் பயன்படுத்த முடியுமா?
ஜியோபோன் வாங்க விரும்புவோர் அதிகம் எழுப்பும் கேள்வியாக இது இருக்கிறது. தற்சமயம் ஜியோபோனில் ஒற்றை சிம் ஸ்லாட் மட்டுமே வழங்கப்பட உள்ளது. ஏற்கனவே ஜியோபோன் வைத்திருப்போர் அந்த சிம் கார்டையே புதிய ஜியோபோனிலும் பயன்படுத்தலாம், எனினும் புதிய போனில் பயன்படுத்த ரூ.153 திட்டத்திற்கு மாற வேண்டும்.
பின் இந்த சிம் கார்டினை மற்ற 4ஜி வோல்ட்இ ஸ்மார்ட்போனிலும் பயன்படுத்த முடியும். எனினும் மீண்டும் பழைய திட்டத்திற்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும்.
மற்ற நெட்வொர்க் சிம் கார்டு?
ஜியோபோனில் மற்ற நெட்வொர்க் சிம் கார்டுகள் வேலை செய்யாது என ஜியோ வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி தெரிவித்துள்ளார். இதனால் ஏர்டெல், ஐடியா, பி.எஸ்.என்.எல் போன்ற நிறுவனங்களின் சிம் கார்டுகளை ஜியோபோனில் பயன்படுத்த முடியாது.

டூயல் சிம் ஜியோபோன்?
இதுவரை டூயல் சிம் கார்டு கொண்ட ஜியோபோன் வெளியாவது குறித்து ஜியோ சார்பில் எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. தற்சமயம் வரை ஜியோபோனில் ஜியோ நெட்வொர்க் மட்டும் பயன்படுத்த ஒற்றை சிம் கார்டு ஸ்லாட் மட்டுமே வழங்கப்படுகிறது.
ஜியோபோன் கேபிள் டிவி பிளக்?
ரிலையன்ஸ் ஜியோபோனுடன் அந்நிறுவனம் புதிய கேபிள் பிளக் ஒன்றையும் அறிமுகம் செய்தது. இந்த கேபிள் கொண்டு ஜியோபோனினை டிவியுடன் இணைத்து வீடியோக்களை பார்த்து ரசிக்க முடியும். எனினும் இந்த கேபிள் விலை அறிவிக்கப்படவில்லை. எனினும் இந்த கேபிள் வாங்கும் போது ரூ.309 திட்டத்திற்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும். இதில் தினமும் 1 ஜிபி டேட்டா 29 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
முன்பதிவு செய்வது எப்படி?
ரிலையன்ஸ் ஜியோபோன் பிரீ-புக்கிங் ஆகஸ்டு 24-ம் தேதியும், ஆகஸ்டு 15-ம் தேதி முதல் பீட்டா டெஸ்டிங் செய்யப்படுகிறது. இதன் விற்பனை செப்டம்பர் மாதம் முதல் துவங்கும், விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள் ஜியோ இணையதளம் சென்று பதிவு செய்து கொள்ளலாம்.
Next Story