search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவரவு: நுபியா எம்2 பிளே ஸ்மார்ட்போன் அறிமுகம்
    X

    புதுவரவு: நுபியா எம்2 பிளே ஸ்மார்ட்போன் அறிமுகம்

    இசட்டிஇ நிறுவனம் தனது எம்2 ஸ்மார்ட்போனின் புதிய பதிப்பை சீனாவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்துள்ளது. தற்சமயம் இதன் விலை மற்றும் விற்பனை தேதி அறிவிக்கப்படாத நிலையில் வழங்கப்பட்டுள்ள சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    பீஜிங்:  

    இசட்டிஇ நிறுவனம் தனது எம்2 ரக புதிய ஸ்மார்ட்போனினை சீனாவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்துள்ளது. நுபியா எம்2 பிளே என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. 

    பார்க்க நுபியா எம்2 லைட் போன்றே காட்சியளிக்கும் புதிய எம்2 பிளே ஸ்மார்ட்போனில் மெட்டல் பாடி, வளைந்த கிளாஸ் மற்றும் ஒற்றை கேமரா லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஹோம் பட்டன் மற்றும் கைரேகை ஸ்கேனர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. நுபியா எம்2 ஸ்மார்ட்போனில் டூயல் கேமரா அமைப்பு வழங்கப்பட்டிருந்தது.

    நுபியா எம்2 பிளே சிறப்பம்சங்கள்:

    * 5.5 இன்ச் எச்டி, 720x1280 பிக்சல் ரெசல்யூஷன் டிஸ்ப்ளே
    * ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 435 சிப்செட்
    * 3 ஜிபி ரேம்
    * 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
    * 13 எம்பி பிரைமரி கேமரா
    * 5 எம்பி செல்ஃபி கேமரா
    * 3000 எம்ஏஎச் பேட்டரி
    * 4ஜி வோல்ட்இ
    * ப்ளூடூத், வை-பை
     
    முன்னதாக வெளியான நுபியா எம்2 லைட் ஸ்மார்ட்போனில் ஹீலியோ P10 சிப்செட், 3 ஜிபி ரேம் மற்றும் 4 ஜிபி ரேம் என இரண்டு மாடல்களில் வெளியிடப்பட்டது. இத்துடன் 32 ஜிபி இன்டெர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டது.
    Next Story
    ×