என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பூம்புகாரில் மகளிர் பெருவிழா மாநாடு - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு
    X

    பூம்புகாரில் மகளிர் பெருவிழா மாநாடு - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு

    • அன்புமணி மீது ராமதாஸ் சரமாரியான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
    • நேற்று பேசிய அன்புமணி, "ராமதாஸ் எங்கள் குலதெய்வம்" என்று தெரிவித்தார்.

    பா.ம.க. நிறுவனர் ராமதாசுக்கு தலைவர் அன்புமணிக்கு இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சில நாட்களுக்கு முன்பு அன்புமணி மீது ராமதாஸ் சரமாரியான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதனையடுத்து நேற்று மாவட்ட செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அன்புமணி, "ராமதாஸ் எங்கள் குலதெய்வம்" என்று தெரிவித்தார்.

    இந்த பரபரப்புகளுக்கு இடையே இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், "ஆகஸ்ட் 10 தேதி பூம்புகாரில் மகளிர் பெருவிழா மாநாடு நடத்தப்படும். இந்த மாநாட்டிற்கு அன்புமணி உள்ளிட்ட அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்படும்" என்று அறிவித்தார்.

    Next Story
    ×