என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சட்டசபை தேர்தலில் வெற்றியை தீர்மானிப்பது யார்?
    X

    சட்டசபை தேர்தலில் வெற்றியை தீர்மானிப்பது யார்?

    • தற்போதைய சூழ்நிலையில் வாக்காளர் பட்டியலில் 6 கோடியே 36 லட்சத்து 12 ஆயிரத்து 950 வாக்காளர்கள் உள்ளனர்.
    • 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் ஒரு கோடியே 35 லட்சத்து 3 ஆயிரத்து 920 பேர் உள்ளனர்.

    சென்னை:

    தமிழக சட்டசபை தேர்தல், அடுத்த ஆண்டு (2026) மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. எனவே இப்போது வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியல் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. அடுத்த ஆண்டு (2026) ஜனவரி 1-ந்தேதியை தகுதியேற்பு நாளாக கொண்டு மீண்டும் வாக்காளர் பட்டியல் தயாரித்து வெளியிடப்படும். அதில் கூடுதலாக இன்னும் அதிகமாக 11 லட்சம் பேர் இடம் பெற வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் பட்டியலில் இருந்து சுமார் 2 லட்சம் அல்லது 3 லட்சம் பெயர்கள் நீக்கப்படலாம்.

    தற்போதைய சூழ்நிலையில் வாக்காளர் பட்டியலில் 6 கோடியே 36 லட்சத்து 12 ஆயிரத்து 950 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களின் வயது வாரியான விவரங்களும் வெளியிடப்பட்டு உள்ளனர். அதில் 40 முதல் 49 வயது வரை உள்ளவர்கள்தான் அதிகம் உள்ளனர். அவர்களது எண்ணிக்கை மட்டும் ஒரு கோடியே 37 லட்சத்து 4 ஆயிரத்து 815 ஆகும். அது மொத்த வாக்காளர் பட்டியலில் 21.55 சதவீதம் ஆகும். இவர்களுக்கு அடுத்தப்படியாக 30 முதல் 39 வயது வரை உள்ளவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஒரு கோடியே 30 லட்சத்து 19 ஆயிரத்து 561 பேர் உள்ளனர். இவர்களது சதவீதம் 20.47 ஆகும்.

    தேர்தலில் வெற்றியை வயது அடிப்படையில் மூன்றாக பிரிக்கலாம். அதன்படி 18 வயது முதல் 39 வயது வரை உள்ளவர்கள் மட்டும் 2 கோடியே 50 லட்சத்து 9 ஆயிரத்து 746 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களுடைய சதவீதம் 39.31 ஆகும். ஆனால் நடுத்தர வயது உடையவர்கள் 2 கோடியே 50 லட்சத்து 99 ஆயிரத்து 284 பேர் உள்ளனர். இவர்களது சதவீதம் 39.45 ஆகும். இவர்கள்தான் அதிகம்.

    மூன்றாவதாக 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் ஒரு கோடியே 35 லட்சத்து 3 ஆயிரத்து 920 பேர் உள்ளனர். இவர்களது சதவீதம் 21.24 ஆகும். தேர்தலை பொறுத்தவரை இளைஞர்கள் மற்றும் முதியவர்களை விட நடுத்தர வயதுடைவர்கள்தான் அதிகம் உள்ளனர். எனவே அவர்களது ஓட்டு முக்கியத்துவம் பெறும். அதேவேளையில் இளைஞர்களும், நடுத்தர வயதுடையவர்கள் தான் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக இருக்க போகிறார்கள்.

    Next Story
    ×