என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மல்லை சத்யா கடந்த 4 ஆண்டுகளாக கட்சிக்கு விசுவாசமாக இல்லை - வைகோ
திருச்சி:
தமிழ்நாட்டு மக்கள் ஒரு போதும் கூட்டணி ஆட்சியை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அது மட்டுமில்லாமல் கூட்டணி ஆட்சி என்பதற்கு இடம் அளிக்காத வகையில் வரும் தேர்தலில் திமுகவை பெரும்பான்மையாக வெற்றி பெற செய்வார்கள் என்று திருச்சியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார். ம.தி.மு.க. பொது ச்செயலாளர் வைகோ திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க. கூட்டணியில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். தமிழ்நாட்டிற்கு இந்துத்துவ சக்திகளால் ஆபத்து வந்து கொண்டிருக்கிறது. அந்த ஆபத்திலிருந்து தமிழ்நாட்டை காக்க தி.மு.க. கூட்டணியில் இணைந்துள்ளோம்.
கொள்கை அடிப்படையில்தான் தி.மு.க. கூட்டணியில் இணைந்து பணியாற்றி வருகிறோம்.
தி.மு.க. கூட்டணிக்கு பெரிய வாக்கு வங்கி உள்ளது. ம.தி.மு.க.வும் தமிழ்நாட்டில் மிகப் பெரிய அரசியல் சக்தியாக உள்ளது. தி.மு.க. வெற்றி பெற ம.தி.மு.க. தங்களுடைய பங்களிப்பை செலுத்த வேண்டும் என்கிற அடிப்படையில் நாங்கள் கூட்டணியில் இணைந்து பணியாற்றி வருகிறோம்.
செப்டம்பரில் திருச்சியில் நடக்க உள்ள அண்ணா பிறந்தநாள் விழா மாநாட்டிலும் இதனை நான் பிரகனடப்படுத்துவேன்.
கூட்டணி ஆட்சியை தமிழ்நாட்டு மக்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அது மட்டுமல்லாமல் அந்த கூட்டணி ஆட்சி என்கிற பேச்சுக்கே இடமில்லாமல் திமுகவை அறுதி பெரும்பான்மை பெற செய்து வாக்காளர்கள் வெற்றி பெற செய்வார்கள் அதையும் அமித்ஷா நிச்சயம் பார்ப்பார்.
மல்லை சத்யா கடந்த நான்கு ஆண்டுகளாக கட்சிக்கு விசுவாசமாக இல்லை. அவர் குறித்து எந்த கருத்தும் நான் கூற விரும்பவில்லை என்றார்.






