என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கல்லூரிக் கனவுத்திட்டத்தை துணை முதலமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்
- பள்ளிக்கல்வியை முடித்தவர்களுக்கு அழகான எதிர்காலத்தை கொடுப்பதுதான கல்லூரி கனவு திட்டம்.
- இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகம்.
சென்னையில் கல்லூரிக் கனவு 2025 திட்டத்தை தொடங்கி வைத்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* பள்ளிக்கல்வியை முடித்தவர்களுக்கு அழகான எதிர்காலத்தை கொடுப்பதுதான கல்லூரி கனவு திட்டம்.
* கல்வி மட்டுமே வாழ்க்கையை மாற்றும் சக்தி என்பதை உணர்வு அனைவரும் நன்று பயில வேண்டும்.
* யார் கூறுவதையும் அப்படியே நம்பாமல் பகுந்தாய்ந்து உணர வேண்டும் என்று பெரியார் கூறியதை கடைப்பிடிப்பவர்கள் இன்றைய மாணவர்கள்.
* கல்லூரிக் கனவுத்திட்டம் மூலம் ஆண்டுக்கு ஒரு லட்சம் மாணவர்களை கல்லூரிகளில் சேர்க்க நடவடிக்கை.
* இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகம்.
* புதுமைப்பெண், தமிழ் புதல்வன் திட்டங்களால் மாணவ, மாணவிகள் பெருமளவில் பயன்பெறுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story






