என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

"எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்" நூலை வெளியிட்டார் த.வெ.க. தலைவர் விஜய்
- சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசு வழங்கினர்.
- நூல் வெளியீட்டு விழாவில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
"எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்" நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய், ஓய்வு பெற்ற நீதிபதி கே. சந்துரு, எழுத்தாளரும், சமூக உரிமை போராளியுமான ஆனந்த் டெல்டும்ப்டே, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழ் தாய் வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்ச்சியில் தமிழ் பாரம்பரிய இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர்கள் மேடையில் ஏறினர். சிறப்பு விருந்தினர்களை வரவேற்று விகடன் குழும நிர்வாக இயக்குநர் ஸ்ரீனிவாசன் உரையாற்றினார். அதன்பிறகு சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசு வழங்கினார்.
இதைத் தொடர்ந்து வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் நிறுவனரும், வி.சி.க. கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா உரையாற்றினார்.
இதைத் தொடர்ந்து "எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்" நூலை தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் வெளியிட அதன் முதல் பதிப்பை எழுத்தாளர் ஆனந்த் டெல்டும்ப்டே பெற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து முன்னாள் நீதிபதி கே. சந்துரு இரண்டாவது பிரதியை பெற்றுக் கொள்ள, அடுத்த பிரதியை ஆதவ் அர்ஜூனா மற்றும் விகடன் குழும நிர்வாக தலைவர் ஸ்ரீனிவாசன் பெற்றுக் கொண்டனர்.






