என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    டெல்லி காங்கிரஸ் தலைமையின் விருப்பத்தை ஜோதிமணி வார்த்தைகளால் வெடித்துள்ளார்- திருச்சி வேலுச்சாமி கருத்து
    X

    டெல்லி காங்கிரஸ் தலைமையின் விருப்பத்தை ஜோதிமணி வார்த்தைகளால் வெடித்துள்ளார்- திருச்சி வேலுச்சாமி கருத்து

    • எல்லோரையும் அரவணைத்து போவது தான் தலைமை பண்பு.
    • எல்லோரையும் அரவணைத்து தான் போய்க் கொண்டிருக்கிறேன் என விளக்கம் அளித்துள்ளார்.

    திருச்சி:

    கரூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி அவ்வப்போது தெரிவிக்கும் கருத்துகள், விமர்சனங்கள் சர்ச்சைகளாக மாறி வருவது இயல்பான ஒன்று. அந்த வகையில் நேற்று அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கருத்துக்கள் உட்கட்சியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

    அந்த பதிவில், எந்த ஒரு அரசியல் கட்சியும் தனது கட்சியின் மக்களவை உறுப்பினரை தேர்தல் நேரத்தில், தேர்தல் ஆணையத்துக்கு வாக்குச்சாவடி முகவர் பட்டியலை கொடுக்க விடாமல் முடக்க வேண்டும் என நினைக்காது. ஆனால் காங்கிரஸ் கட்சியில் அது நடக்கிறது. தமிழக காங்கிரசில் நடைபெறும் விஷயங்கள் மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது.

    தமிழக காங்கிரசில் தொடரும் உள்கட்சி பிரச்சனைகள் மிகுந்த மனச்சோர்வை ஏற்படுத்துகிறது. ஒரு சிலரின் சுயநலத்துக்காக தமிழ்நாடு காங்கிரஸ் கொஞ்சம் கொஞ்சமாக அழிவின் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இதை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது. ராகுல் காந்தியின் தன்னலமற்ற அரசியலுக்கு நேர் எதிரான பாதையில் தமிழ்நாடு காங்கிரஸ் செல்கிறது என்பன உள்ளிட்ட மேலும் சில கருத்துக்களை பதிவிட்டிருந்தார்.

    இது கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை கொடுத்த பதிலடியில் ஜோதிமணி குறை சொல்லும் அளவுக்கு ஒன்றும் நடக்கவில்லை. எல்லோரையும் அரவணைத்து போவது தான் தலைமை பண்பு. எல்லோரையும் அரவணைத்து தான் போய்க் கொண்டிருக்கிறேன் என விளக்கம் அளித்துள்ளார்.

    இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவரும், செய்தி தொடர்பாளருமான திருச்சி வேலுச்சாமியிடம் கேட்டபோது, தமிழக காங்கிரஸ் தலைமை மீது ஜோதி மணி எம்.பி., கடுமையான விமர்சனத்தை முன் வைத்துள்ளார். ராகுல் காந்தி, பிரியங்கா உள்ளிட்ட தலைவர்களுடன் நேரடி தொடர்பு வைத்திருக்கும் அவர் டெல்லி தலைமையின் விருப்பத்தை தனது வார்த்தைகளால் வெடித்துள்ளார் என்று கருதுகிறேன்.

    டெல்லி தலைமைக்கு தெரியாமல் இதை செய்ததாக நான் நினைக்கவில்லை. தமிழக காங்கிரஸ் தலைமை மீது முன் எப்போதும் இது போன்ற விமர்சனங்களை அவர் வைத்ததில்லை என்றார். தமிழக காங்கிரஸ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள ஜோதிமணியை தொடர்பு கொள்ள முயன்றபோது, அவரது அனைத்து செல்போன்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

    Next Story
    ×