என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு மனைவி மறைவு- அன்புமணி ராமதாஸ் இரங்கல்
- ரேணுகாதேவி உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று காலமானார்.
- டி.ஆர்.பாலு மனைவி ரேணுகாதேவி காலமானார் என்ற செய்தியறிந்து வருத்தமடைந்தேன்.
அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திமுக பொருளாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான டி.ஆர். பாலு அவர்களின் மனைவி ரேணுகாதேவி அவர்கள் உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து வருத்தமடைந்தேன்.
டி.ஆர்.பாலு அவர்களின் பொதுவாழ்க்கைப் பணிகளுக்கு பின்னணியாக இருந்து உதவிய ரேணுகா தேவி அவர்களின் மறைவு டி.ஆர். பாலு அவர்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு.
ரேணுகா தேவி அவர்களை இழந்து வாடும் டி.ஆர்.பாலு, புதல்வர் டி.ஆர்.பி. இராஜா உள்ளிட்ட குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
Next Story






