என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சென்னையில் நாளை (04.06.2025) மின்தடை ஏற்படும் இடங்கள்...
- காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
- வள்ளுவர் நகர் முழு பகுதி, ஜெயா நகர் முழு பகுதி மற்றும் விவேகானந்தா நகர் முழு பகுதி.
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (04.06.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
சிட்லபாக்கம்: TNHB காலணி, மாம்பாக்கம் மெயின் ரோடு, மகேஸ்வரி நகர், பிரியதர்ஷினி நகர், ஒட்டியம்பாக்கம் மெயின் ரோடு, வள்ளுவர் நகர் முழு பகுதி, ஜெயா நகர் முழு பகுதி மற்றும் விவேகானந்தா நகர் முழு பகுதி.
மாம்பாக்கம்: சாந்தி நிகேதன் காலணி, தம்பையா ரெட்டி காலணி, பார்வதி நகர் (வடக்கு), காமட்சி நகர், பாலாஜி நகர், கற்பகம் நகர், ஏபிஎன் நகர், எம்ஜிஆர் நகர், சாரதா கார்டன், சீனிவாசா நகர், ரமணா நகர், மாருதி நகர் மற்றும் அண்ணாநகர் ஆகிய இடங்களில் மின் நிறுத்தப்படும் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






