Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்- 16 ஆகஸ்ட் 2026

தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...
இன்றைய முக்கிய செய்திகள்
இன்றைய முக்கிய செய்திகள்

ஜார்க்கண்ட் முதல்வர், ராகுல் காந்தி உருவ பொம்பை எரிப்பு: 20-ந்தேதி சோரன் வீடு முற்றுகை போராட்டம்- மாணவர்கள் அறிவிப்பு

* ராகுல் காந்தி மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறார். ஆனால், உறுதியான நடவடிக்கை பின்பற்றப்படவில்லை.

* அதனால் ஹேமந்த் சோரன் ஆட்சிக்கு வழங்கும் ஆதரவை ராகுல் காந்தி திரும்பப் பெற வேண்டும்.

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: 2வது சுற்றில் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி

* சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.

* முன்னணி வீரர்கள் நேரடியாக 2வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

டிஎன்பிஎல்: புள்ளிப்பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறியது சேப்பாக்

* முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

* மதுரை பாந்தர்ஸ் அணி 4 வெற்றியுடன் 8 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தது.

உலகக் கோப்பை ஹாக்கி: வேல்ஸ் அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது இந்தியா

* இந்திய அணி டி பிரிவில் இடம்பெற்று உள்ளது.

* கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் இரு கோல்கள் அடித்து வெற்றிக்கு வழிவகுத்தார்.

முன்னாள் அமைச்சர் கட்சி அலுவலகத்தில் சடலமாக கண்டெடுப்பு: மம்தாவுக்கு நெருக்கமானவர்..!

* கல்வி மற்றும் விவசாயத்துறை அமைச்சராகவும் மம்தா பானர்ஜி அரசின் கீழ் பணியாற்றியுள்ளார்.

* இந்த வருடம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜக-வின் துருபா சஹாவிடம் தோல்வியடைந்தார்.

திமுக-அதிமுக கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை..!- திமுக எம்பி கனிமொழி

* பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்குக்கூட பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.

* தூத்துக்குடியிலேயே தொடர்ந்து இதுபோன்ற பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

2025-26ம் நிதியாண்டில் தெற்கு ரெயில்வேயில் ரூ.13,778 கோடி வருவாய்- பொதுமேலாளர் சுப்பாராவ்

* நடப்பு நிதியாண்டில் ஜூலை மாதம் வரை 13.48 மில்லியன் டன்களை எட்டியுள்ளோம்.

* 2025-26-ம் ஆண்டில் 42.184 மில்லியன் டன் சரக்குகளைக் கையாண்டுள்ளது.

3 லட்சம் ரோஹிங்கியா அகதிகளை மீண்டும் ஏற்கிறது மியான்மர்

* தாய் நாட்டிற்கு அழைத்து வர வங்காளதேசத்துடன் இணைந்து மியான்மர் அரசு தீவிரமாகப் பணியாற்றி வருகிறது.

* 3 லட்சத்திற்கும் அதிகமான அகதிகள் மியான்மரின் ராகினே மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதி.

இளைஞர்களை ஏமாற்ற முடியாது Mr. Prime Minister!- செங்கோட்டையில் பிரதமரின் உரை குறித்து மாணிக்கம் தாகூர் விமர்சனம்

* நேற்றைய மோடியின் பேச்சுக்கும், நிஜமான கள யதார்த்தத்திற்கும் எவ்வளவு பெரிய இடைவெளி!

* ரூ.63,000 கோடியில் தொடங்கப்பட்ட பிரதமரின் பயிற்சித் திட்டம் (PMIS) முற்றிலும் முடங்கிக் கிடக்கிறது.

ஒகேனக்கல் ஆற்றில் 8,000 கனஅடி நீர் வரத்து..!- பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை

* தமிழகத்திற்கு 800 கனஅடி வீதம் நீர் திறக்கப்படுகிறது.

* குடிநீர் தேவைக்காக 2000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

வாஜ்பாய் நினைவு நாள்: ஜனாதிபதி, பிரதமர் மோடி மலரஞ்சலி

* டெல்லியில் உள்ள நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு மலரஞ்சலி செலுத்தினார்.

* டெல்லியில் உள்ள நினைவிடத்தில் டெல்லி முதலமைச்சர் ரேகா அஞ்சலி.

நடுராத்திரியில் விருந்தினர் மாளிகையில் இருந்து வெளியேற்ற முயற்சி: மஹுவா மொய்த்ரா எம்.பி. குற்றச்சாட்டு

* மாலை 6.15 மணியளவில் நான் சர்க்யூட் ஹவுஸ் அறைக்குச் சென்றேன். ஊழியர்கள் எனக்கு வழக்கமாக ஒதுக்கப்படும் அறைக்கு என்னை அழைத்துச் சென்றனர்.

* அந்த அறை தங்குவதற்குத் தயாராக வைக்கப்பட்டிருந்தது. மாலை 7 மணிக்கு எனது அறைக்குத் தேநீர் கொண்டு வரப்பட்டது. இரவு 9.20 மணிக்கு இரவு உணவு அங்கேயே பரிமாறப்பட்டது.

டார்வின் டெஸ்ட்: ஆஸ்திரேலியாவை சொந்த மண்ணில் நொறுக்கியது வங்கதேசம்-சாதனை வெற்றி

* வங்கதேசம் 2வது இன்னிங்சில் ஒரு விக்கெட்டுக்கு 57 ரன்கள் எடுத்து வென்றது.

* ஹசன் மகமது ஆட்ட நாயகன் விருது வென்றார்.

இந்தியா, இலங்கை இடையிலான முதல் டெஸ்ட்: மழையால் பாதிப்பு

* சிறப்பாக விளையாடிய தேவ்தத் படிக்கல் 134 பந்துகளில் சதம் விளாசினார்.

* மழையால் ஆட்டம் தொடங்குவதில் தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டது.

கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: தமிழக அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும்- பெ. சண்முகம் வலியுறுத்தல்

* துப்பாக்கிச் சூட்டுக் கொலையை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

* சம்பந்தப்பட்ட வனத்துறையினரைப் பணிநீக்கம் செய்து கைது செய்ய வேண்டும்.

தரக்குறைவான பேச்சுக்காக தமிழக மக்களிடம் மன்னிப்பு கேளுங்கள் - நயினார் நாகேந்திரனுக்கு அமைச்சர் ரமேஷ் கண்டனம்!

* நயினார் நாகேந்திரன் தமிழக மக்களிடம் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என அமைச்சர் ரமேஷ் வலியுறுத்தினார்.

* அரசியல் எதிர்ப்பு: விஜய் குடும்பம் பற்றிய அநாகரிக பேச்சுக்கு பல கட்சிகளிடமிருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை தக்கவைத்தது வங்கதேசம்

* வங்கதேச அணி புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து 4-வது இடத்தில் நீடிக்கிறது.

* இந்திய அணி 48.15 சதவீத புள்ளிகளைப் பெற்று 5வது இடத்தில் உள்ளது.

* ஆசிஷ் பானர்ஜி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

*கட்சி அலுவலகத்தில் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார்.

கர்நாடகா வனத்துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்கள் - காலை முதல் நடந்த போராட்டம் வாபஸ் – உடல்களைப் பெற உறவினர்கள் சம்மதம்!

* அரசு பேச்சுவார்த்தை: பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கோரிக்கையை ஏற்று அரசு தரப்பில் முக்கிய பேச்சுவார்த்தை நடைபெற்றது.

* இழப்பீடு அறிவிப்பு: உயிரிழந்த மூன்று பேர் குடும்பத்திற்கும் தலா 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்.

சோனியா காந்தி செய்த பாவத்தை நாட்டு மக்கள் மன்னிக்க மாட்டார்கள் - அமித் ஷா

*சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் தியாகத்தை கொச்சைப்படுத்துவதாகும்

* தியாகிகள் தூக்குமேடை ஏறும்போது பாடிய தாரக மந்திரம்

ராமநாதபுரம்: லஞ்ச வழக்கில் சிக்கியவருக்கு சிறந்த பணிக்கான நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

*கடந்த 3 ஆண்டுகளில் ஜி பே மூலம் சுமார் 25 லட்ச ரூபாய் பண பறிமாற்றம்

*நகராட்சியின் வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயன் என்பவருக்கும் சிறந்த பணிக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.

மேகதாது விவகாரம் போல வாய்மூடி இருக்கக்கூடாது.. கர்நாடகாவில் 3 தமிழர்கள் கொலைக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்

*அந்தோணி சுவாமி, லாசர் டோடியா குமார் மற்றும் ஜெகநாதன் டோடியா பீட்டர் ஆகியோர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

*அவர்களுக்கு அரசுப் பணியும் கிடைக்கச் செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்

வாரணாசி விமான நிலையத்தில் சோதனையின்போது வெடித்த துப்பாக்கி.. குண்டடிபட்டு 2 பேர் காயம்

*ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணிக்க வந்திருந்தார்.

*இரண்டு பாதுகாப்பு ஊழியர்களின் மீது பாய்ந்தது.

டெல்லி-என்.சி.ஆரில் உருவெடுக்கும் 'டான்ஸ்பிரீனர்ஸ்': நடனக் கலையை வெற்றிகரமான வணிகமாக மாற்றும் இளைஞர்கள்!

*இன்றைய டான்ஸ்பிரீனர்ஸ் வெறும் நடனம் கற்பிப்பதோடு நின்றுவிடுவதில்லை. அவர்கள் தங்கள் நிறுவனங்கள் மூலமாகப் பல்வேறு நவீன வணிக மாதிரிகளைச் செயல்படுத்துகின்றனர்.

கர்நாடகாவில் சுட்டுக்கொல்லப்பட்ட 3 தமிழர்கள் உடல்களை வாங்க மறுத்து 2-வது நாளாக போராட்டம்: வனத்துறையினர் 7 பேர் மீது வழக்குப்பதிவு!

*இந்த வழக்கால் அரசும் தர்மசங்கடத்திற்கு உள்ளாகியுள்ளது. நாங்கள் ஒரு முழுமையான விசாரணையை நடத்துவோம் என்று கூறினார்.

மத்தியபிரதேசத்தில் மானிய உரங்கள் விற்பனைக்கு திடீர் தடை: காரீஃப் பயிர் விளைச்சல் பாதிக்கும் என விவசாயிகள் அச்சம்!

*இந்த தடையால் உரம் கருப்பு சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படும் அபாயம் உள்ளதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.

"நான் கூட இதுக்கு தான் நினைச்சேன்..."-கைது குறித்து உதயநிதி நையாண்டி பேச்சு!

* "அரசே சொந்தச் செலவில் எனக்கு ஒரு ரோடு ஷோ ஏற்பாடு செய்து அழைத்துச் சென்றது போல் இருந்தது" என்று நகைச்சுவையாகக் கூறினார்.

நயினாருக்கு நாவடக்கம் தேவை: சட்டப்படி நடவடிக்கை எடுக்க சிபிஎம் வலியுறுத்தல்!

*நயினார் நாகேந்திரனின் இந்தப் பேச்சுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியிலிருந்து கடுமையான எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.

சுதந்திர தின அணிவகுப்பில் மயங்கி விழுந்து காவலர் உயிரிழப்பு: ரூ.30 லட்சம் நிதியுதவி வழங்கி முதலமைச்சர் விஜய் உத்தரவு!

*காவலருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தபோதிலும், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

த.வெ.க அரசிற்கு அண்ணாமலை பாராட்டு: டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட நடவடிக்கைக்கு வரவேற்பு!

*த.வெ.க அரசு ஆட்சிப் பொறுப்பேற்று 100 நாட்கள் மட்டுமே நிறைவடைந்துள்ளதால், உடனடியாக முடிவுகளுக்கு வர இயலாது,

'மேகதாது விவகாரத்தில் நேர்மையான, தவறு செய்யாத மோடியை இன்றும் நான் நம்புகிறேன்'-அண்ணாமலை!

*தலைவர்கள் இனி டெல்லியிலோ, புனித ஜார்ஜ் கோட்டையிலோ, போயஸ் தோட்டத்திலோ, கோபாலபுரத்திலோ அல்லது பனையூரிலோ உட்கார்ந்து முடிவுகளை எடுக்கும் காலம் முடிந்துவிட்டது.

2029 நாடாளுமன்றத் தேர்தலில் மாற்றத்தை விரும்பும் 64 கோடி வாக்காளர்கள்: அண்ணாமலை கணிப்பு!

*பாரம்பரிய அரசியல் வழிகளிலிருந்து விலகி, வெளிப்படைத்தன்மை மற்றும் தொலைநோக்குக் பார்வை கொண்ட தலைமைக்கே மக்கள் முன்னுரிமை அளிப்பார்கள்.

அடுத்த 10 ஆண்டுகளில் பெரும்பாலான நோய்களுக்கு AI மூலம் தீர்வு: ஆந்த்ரோபிக் சிஇஓ டாரியோ அமோடி கணிப்பு!...

*AI-ன் உதவியால் சில வாரங்களிலேயே புதிய மருந்துகளை வடிவமைக்க முடியும் என்பது இதன் சிறப்பம்சமாகும்.

*மருத்துவ ஆராய்ச்சி மற்றும் உயிரியல் துறையில் AI தொழில்நுட்பம் புகுத்தப்படுவதன் மூலம், ஆய்வுகளின் வேகம் 10 மடங்கு வரை அதிகரிக்கும் என்று டாரியோ அமோடி சுட்டிக்காட்டியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com