முன்னாள் அமைச்சர் கட்சி அலுவலகத்தில் சடலமாக கண்டெடுப்பு: மம்தாவுக்கு நெருக்கமானவர்..!

மம்தா பானர்ஜி முதலமைச்சராக இருந்து போது, மேற்கு வங்க சட்டசபை துணை சபாநாயகராக பணியாற்றியுள்ளார்.
ஆசிஷ் பானர்ஜி
ஆசிஷ் பானர்ஜி
Published on

மேற்கு வங்க மாநிலம் பிர்பம் மாவட்டத்தில் உள்ள ராம்பூர்ஹாட் வசித்து வந்தவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆசிஷ் பானர்ஜி. இவர் தனது வீட்டு அருகில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

தூக்கில் தொடங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அவரது உடல் உடற்கூறு சோதனைக்கான மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

5 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர் ஆகிஷ் பானர்ஜி

இவர் ராம்பூர்ஹாட்டில் இருந்து ஐந்து முறை எம்.எல்.ஏ.-வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். மம்தா பானர்ஜி முதலமைச்சராக இருந்தபோது, துணை சபாநாயகராக பணியாற்றியுள்ளார்.

இந்த வருடம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜக-வின் துருபா சஹாவிடம் தோல்வியடைந்தார். ராம்பூர்ஹாட்டில் உள்ள ஹட்டலபாரா என்ற பகுதியில் வசித்து வந்தார். அவரது உடல் கண்டெடுக்கப்பட்டதும், ஏராளமான தொண்டர்கள் அலுவலத்திற்கு வெளியே குவிந்தனர்.

முன்னாள் அமைச்சர்

அவர் கல்வி மற்றும் விவசாயத்துறை அமைச்சராகவும் மம்தா பானர்ஜி அரசின் கீழ் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிஷ் பானர்ஜி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டாரா? என போலீசார் தீவிய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com