ஒகேனக்கல் ஆற்றில் 8,000 கனஅடி நீர் வரத்து..!- பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 4385 கன அடியில் இருந்து 6,179 கன அடியாக அதிகரித்துள்ளது.
Hogenakkal
Published on

ஒகேனக்கல்

தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கான நீர் வரத்து 6500 கன அடியிலிருந்து 8000 கன அடியாக உயர்ந்துள்ளது.

இதன்எதிரொலியால், ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கான நீர்வரத்து 8000 கன அடியாக அதிகரித்ததால் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது.

மேட்டூர் அணை

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 4385 கன அடியில் இருந்து 6,179 கன அடியாக அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணையின் தற்போதைய நீர்மட்டம் 81.31 அடியாக உள்ள நிலையில் நீர் இருப்பு 43.27 மில்லியன் கன அடியாக உள்ளது.

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 6,179 கனஅடியாக அதிகரித்துள்ள நிலையில் குடிநீர் தேவைக்காக 2000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

இதன் எதிரொலியால், ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கான நீர்வரத்து 8000 கன அடியாக அதிகரித்ததால் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணை

முல்லைப் பெரியாறு அணைக்கான நீர்வரத்து 920.30 கன அடியாக உள்ள நிலையில் தமிழகத்திற்கு 800 கனஅடி வீதம் நீர் திறக்கப்படுகிறது.

முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டம் 122.95 கனஅடியாக உள்ள நிலையில் நீர் இருப்பு 3,212.10 மில்லியன் கனஅடியாக உள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com