இந்தியா, இலங்கை இடையிலான முதல் டெஸ்ட்: மழையால் பாதிப்பு

சிறப்பாக விளையாடிய தேவ்தத் படிக்கல் 134 பந்துகளில் சதம் விளாசினார்.
galle
Published on

இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட்டின் 2-வது நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டு உள்ளது.

இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில், காலே நகரில் நடைபெறும் முதல் டெஸ்டில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்ய முடிவெடுத்தது.

அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 32 ரன்களில் ரன்-அவுட் ஆனார். இந்தப் போட்டியில் கே.எல்.ராகுல் சிறப்பாக விளையாடி 77 ரன்கள் எடுத்தார். காயம் காரணமாக அவர் ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார். கேப்டன் சுப்மன் கில் 16 ரன்களில் ஆட்டமிழந்தார்.

முதல் நாள் ஆட்டம்

தொடர்ந்து சிறப்பாக ஆடிய விளையாடிய தேவ்தத் படிக்கல் 134 பந்துகளில் சதம் விளாசினார். ஆட்டம் மழையால் இடையிடையே பாதிக்கப்பட்டது.

முதல் நாள் முடிவில் இந்தியா முதல் இன்னிங்சில் 73 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 288 ரன்கள் எடுத்துள்ளது. ரிஷப் பண்ட் 27 ரன்னும், படிக்கல் 131 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்நிலையில், இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்க இருந்தது. காலை 10 மணியளவில் லேசாக தூறல் போட்டது. இதனால், களத்தில் நீர் தேங்காமல் இருப்பதற்காக பாதுகாப்பாக ‘கவர்’ செய்யப்பட்டது. எனினும், அதன்மீது மழை நீர் விழுந்தபடி இருந்தது.

உணவு இடைவேளை

அவ்வப்போது ஊழியர்கள் அதனை பாதுகாப்பாக வெளியேற்றினர். தொடர்ந்து, மழை தூறிக்கொண்டே இருந்தது. மழையால் ஆட்டம் தொடங்குவதில் தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டது. 11.40 மணியளவில் மதிய உணவுக்கான இடைவேளை விடப்பட்டது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com