டாஸ்மாக் கடைகள் மூடல்: த.வெ.க அரசிற்கு அண்ணாமலை பாராட்டு!

த.வெ.க அரசு ஆட்சிப் பொறுப்பேற்று 100 நாட்கள் மட்டுமே நிறைவடைந்துள்ளதால், உடனடியாக முடிவுகளுக்கு வர இயலாது,
Annamalai- vijay
Published on

எழும்பூர் ராணி மெய்யம்மை ஹாலில் இருந்து இயற்கை வளங்கள், நிலம், நீர் மற்றும் வனப்பாதுகாப்பை வலியுறுத்தி அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் திரளான மக்கள் கலந்துகொண்டனர். 'வீ தி லீடர்ஸ்' அமைப்பின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களும் பொதுமக்களும் உணர்வுப்பூர்வமாகக் கலந்துகொண்டனர். இந்நிகழ்சியில் பேசிய அண்ணாமலை தவெக அரசை பாராட்டியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) தலைமையிலான புதிய அரசு அமைந்து 100 நாட்கள் கடந்துள்ள நிலையில், பாஜக முக்கியத் தலைவர் அண்ணாமலை த.வெ.க அரசின் சில குறிப்பிட்ட செயல்பாடுகளைப் பாராட்டிப் பேசியுள்ளார். புதிய அரசு பொறுப்பேற்று குறுகிய காலமே ஆகியுள்ளதால், அவர்களின் செயல்பாடுகளைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்று அவர் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

டாஸ்மாக் கடைகள் மூடல்

பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நலனைக் கருத்தில் கொண்டு, கல்வி நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் இயங்கி வந்த டாஸ்மாக் மதுபானக் கடைகளை த.வெ.க அரசு அதிரடியாக மூடியுள்ளது. அரசின் இந்த நடவடிக்கை மிகுந்த வரவேற்புக்குரியது என்றும், மக்கள் நலன் சார்ந்த இத்தகைய முடிவுகள் பாராட்டத்தக்கவை என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பொறுமை காக்க வலியுறுத்தல்

த.வெ.க அரசு ஆட்சிப் பொறுப்பேற்று 100 நாட்கள் மட்டுமே நிறைவடைந்துள்ளதால், உடனடியாக முடிவுகளுக்கு வர இயலாது என்று கூறிய அண்ணாமலை, அரசின் அடுத்தகட்ட திட்டங்கள் மற்றும் வாக்குறுதிகளின் அமலாக்கத்தைப் பொறுத்திருந்து கண்காணிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அரசியல் ரீதியான கருத்து வேறுபாடுகள் இருப்பினும், நன்மைகளை ஆதரிக்கும் அவரது இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com