சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: 2வது சுற்றில் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
djokovic
Published on

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடந்து வருகிறது. இத்தொடர் வரும் 23-ம் தேதி வரை நடைபெறுகிறது. தற்போது 2வது சுற்று போட்டிகள் நடந்து வருகிறது.

முன்னணி வீரர்கள் நேரடியாக 2வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், அர்ஜெண்டினாவின் தியாகோ கஸ்டின் டிரண்டே உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய ஜோகோவிச் முதல் செட்டை 6-2 என வென்றார். இதில் சுதாரித்துக் கொண்ட அர்ஜென்டினா வீரர் அதிரடியாக ஆடி அடுத்த இரு செட்களை 6-4, 6-4 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

இதன்மூலம் முன்னணி வீரரான ஜோகோவிச் 2வது சுற்றிலேயே தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com