என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    GOLD PRICE TODAY: அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை - எவ்வளவு தெரியுமா?
    X

    GOLD PRICE TODAY: அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை - எவ்வளவு தெரியுமா?

    • தங்கம் விலை கிராமுக்கு ரூ.140 குறைந்து ரூ.14,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    • வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது.

    தங்கம் விலை கடந்த 10, 11-ந்தேதிகளில் விலை உயர்ந்து வந்த நிலையில், 12, 13-ந்தேதிகளில் விலை குறைந்து காணப்பட்டது.

    நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 970-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்து 760-க்கும், நேற்று கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.14,900-க்கும், சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.1,19,200-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இந்நிலையில் தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,120 குறைந்து ரூ.1,18,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.140 குறைந்து ரூ.14,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி விலை ரூ.10 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.280-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:

    13-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,200

    12-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,760

    11-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,20,960

    10-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,20,400

    09-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,600

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:

    13-03-2026- ஒரு கிராம் ரூ.290

    12-03-2026- ஒரு கிராம் ரூ.290

    11-03-2026- ஒரு கிராம் ரூ.300

    10-03-2026- ஒரு கிராம் ரூ.300

    09-03-2026- ஒரு கிராம் ரூ.290

    Next Story
    ×