என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

திருப்பூரில் எஸ்.ஐ. கொலை- 6 தனிப்படைகள் அமைப்பு
- அப்பா, மகன் உள்ளிட்ட 4 பேரும் மோதலில் ஈடுபட்டுள்ளதாக வந்த தகவலையடுத்து அங்கு எஸ்.ஐ. சண்முகவேல் மற்றும் காவலர் சென்றுள்ளனர்.
- மோதலில் ஈடுபட்ட 4 பேரும் திட்டமிட்டு வரவழைத்து எஸ்.ஐ. சண்முகவேலை வெட்டி கொன்றனரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் மகேந்திரன் எம்.எல்.ஏ. தோட்டத்தில் எஸ்.ஐ. சண்முகவேல் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அ.தி.மு.க. மகேந்திரன் எம்.எல்.ஏ. தோட்டத்தில் அப்பா, மகன் உள்ளிட்ட 4 பேரும் மோதலில் ஈடுபட்டுள்ளதாக வந்த தகவலையடுத்து அங்கு எஸ்.ஐ. சண்முகவேல் மற்றும் காவலர் சென்றுள்ளனர்.
மோதலை தடுத்து எஸ்.ஐ. சண்முகவேல் சமாதானப்படுத்த முயன்றபோது அவர்கள் சண்முகவேல் வெட்டி கொன்றுள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கொலை தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுபோதையில் மோதலில் ஈடுபட்ட 4 பேரும் திட்டமிட்டு வரவழைத்து எஸ்.ஐ. சண்முகவேலை வெட்டி கொன்றனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் எஸ்.ஐ. சண்முகவேல் வெட்டிக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக 6 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
எஸ்.ஐ. சண்முகவேலை வெட்டிக் கொன்றதாக கூறப்படும் மணிகண்டன், அவரது சகோதரர், தந்தையும் தலைமறைவாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
எஸ்.ஐ. சண்முகவேல் வெட்டிக் கொல்லப்பட்டது தொடர்பாக மணிகண்டன் உள்ளிட்டோரை கைது செய்ய அமைக்கப்பட்டுள்ள 6 தனிப்படை போலீசார் அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.






