என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

திருப்பரங்குன்றம் விவகாரம்: தமிழகம் முழுவதும் 7-ந்தேதி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
- இந்துக்களை ஏமாளியாக நினைத்து ஓட்டு வாங்கலாம் என நினைக்கின்றனர்.
- இந்த நாடு மதசார்பற்ற நாடாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் கருத்து.
திருப்பூர்:
இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் திருப்பூரில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றக்கூடாது என காவல் துறையை வைத்து தடுப்பது இந்துக்களுக்கு மன வேதனையை ஏற்படுத்தி உள்ளது. மனுதாரரையும் தடுத்து அரசு இரட்டை வேடம் போடுகிறது. தி.மு.க. இந்து விரோத அரசாக செயல்படுகிறது. 178 கோவில்களை தி.மு.க. அரசு இடித்துள்ளது. சிறுபான்மையினர் ஓட்டுக்காக இப்படி செய்கின்றனர். இந்துக்களை ஏமாளியாக நினைத்து ஓட்டு வாங்கலாம் என நினைக்கின்றனர். காவல் துறையும் கூலிக்காரர்கள் போல நடத்தப்படுகிறார்கள். இதனை கண்டித்து வருகிற 7-ந்தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். சட்டத்துறை அமைச்சர் தவறான தகவல்களை சொல்கிறார்.
இந்த நாடு மதசார்பற்ற நாடாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் கருத்து. ஆனால் மற்ற மதத்தை போல இந்துக்களை நடத்துவதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.






