என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    திரு.வி.க. பேருந்து நிலையம் திறப்பு விழா: அடுத்த அரைவேக்காடு திறப்பு விழா என அதிமுக ஐ.டி. விங் விமர்சனம்
    X

    திரு.வி.க. பேருந்து நிலையம் திறப்பு விழா: அடுத்த அரைவேக்காடு திறப்பு விழா என அதிமுக ஐ.டி. விங் விமர்சனம்

    • அரை குறையாக இருக்கும் கட்டுமானங்களை மக்கள் பார்க்க மாட்டார்களா?
    • இப்படி தங்களை ஏமாற்றும் வெற்று மாடல் அரசு தொடர வேண்டும் என்றா மக்கள் நினைப்பார்கள்?

    அ.தி.மு.க. ஐ.டி. விங் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    மத்திய கைலாஷ் பாலம், தக்கலை பேருந்து நிலையம் வரிசையில் அடுத்த அரைவேக்காடு திறப்பு விழா!

    திருவள்ளூர் திரு.வி.க. பேருந்து நிலையத்தை அதாவது, எந்த வேலையுமே முடியாத நிலையில் பேருந்தும் மக்களும் கூட உள்ளே செல்ல முடியாத ஒரு பேருந்து நிலையத்தை நாளை துவக்கி வைக்க உள்ளார் பொம்மை முதல்வர்.

    தேர்தல் அவசரத்தில் எதையாவது திறப்பது போல போட்டோ ஷூட் எடுத்துவிட்டு விளம்பரம் செய்வதிலேயே குறியாக இருக்கிறார் மு.க. ஸ்டாலின்.

    இந்த அரை குறையாக இருக்கும் கட்டுமானங்களை மக்கள் பார்க்க மாட்டார்களா? இப்படி தங்களை ஏமாற்றும் வெற்று மாடல் அரசு தொடர வேண்டும் என்றா மக்கள் நினைப்பார்கள்? வாய்ப்பே இல்லை!

    இவ்வாறு ஐ.டி. விங் அந்த பதிவில் விமர்சித்துள்ளது.

    Next Story
    ×