என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி பட்டாசுகள் வெடிக்க வேண்டாம்- கோவில் நிர்வாகம் வேண்டுகோள்
- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் கும்பாபிஷேக திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகிறது.
- பக்தர்களையும், வியாபாரிகளையும் மற்றும் பொதுமக்களையும் கோவில் நிர்வாகம் கேட்டுக்கொள்கிறது.
மதுரை:
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இணை கமிஷனர் சுரேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் கும்பாபிஷேக திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகிறது. எனவே வருகிற 20-ந் தேதி தீபாவளி பண்டிகை நாளான்று கோவில் அருகிலோ, சித்திரை வீதிகளிலோ, ஆவணி மூலவீதிகளிலோ தீ விபத்தினை ஏற்படுத்தும் பொருட்களையோ, வெடிக்கும் பொருட்களையோ, பாதுகாப்பு கருதி உபயோகப்படுத்திட வேண்டாம் என பக்தர்களையும், வியாபாரிகளையும் மற்றும் பொதுமக்களையும் கோவில் நிர்வாகம் கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story






