என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அவர் மனைவியே தெலுங்கர்தானே... சீமானுக்கு எதிராக தெலுங்கு முன்னேற்றக் கழகம் போராட்டம்
- வீரபாண்டிய கட்டபொம்மனை சீமான் இழிவுபடுத்துவதை பொறுக்க முடியாது.
- தெலுங்கர்கள் வேண்டாம் என்றால் தனது மனைவி கயல்விழியை வீட்டைவிட்டு அனுப்பிடுவாரா சீமான்?
தெலுங்கர்கள் குறித்து தொடர்ந்து சீமான் அநாகரிகமாக பேசி வருவதாக தெலுங்கு முன்னேற்றக் கழகத்தினர் குற்றம் சாட்டி சென்னையில் போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தில் தெலுங்கு முன்னேற்றக் கழக நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-
* விடுதலைக்காக போராடிய வீரபாண்டிய கட்டபொம்மனை சீமான் இழிவுபடுத்துவதை பொறுக்க முடியாது.
* சீமான் பாஞ்சாலங்குறிச்சி படம் எடுத்த போது அவருக்கு உறுதுணையாக இருந்தது நாங்கள் தான்.
* அநாகரிகமாக பேசுவதை சீமான் நிறுத்தாவிட்டால் விளைவுகள் மோசமாக இருக்கும்.
* தெலுங்கர்கள் வேண்டாம் என்றால் தனது மனைவி கயல்விழியை வீட்டைவிட்டு அனுப்பிடுவாரா சீமான்?
என்று தெரிவித்தார்.
Next Story






