என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் - தமிழிசை
- 9 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட உள்ளது.
- தவறு செய்யும் நபர்களுக்கு பாடம் கற்றுக் கொடுக்கும் வகையில் தீர்ப்பு அமைய வேண்டும்.
பொள்ளாச்சி கூட்டு பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என்று கோவை மகளிர் கோர்ட் நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பளித்து உள்ளார்.
கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன், ஹெரன்பால், பாபு, அருளானந்தம் மற்றும் அருண்குமார் ஆகிய 9 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் தண்டனை விவரங்கள் 12 மணிக்கு அறிவிக்கப்பட உள்ளது.
இந்த நிலையில் பொள்ளாச்சி கூட்டு பாலியல் வழக்கு தொடர்பாக பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:
* பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும்.
* மனிதாபிமானம் இல்லாதவர்களுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும்.
* தவறு செய்யும் நபர்களுக்கு பாடம் கற்றுக் கொடுக்கும் வகையில் தீர்ப்பு அமைய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Next Story






