என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கார்த்திகை தீபத்தை கலவர தீபமாக மாற்ற முயலும் மதவெறி சக்திகளை தமிழ்நாடு முறியடிக்கும் - சு.வெங்கடேசன்
    X

    கார்த்திகை தீபத்தை கலவர தீபமாக மாற்ற முயலும் மதவெறி சக்திகளை தமிழ்நாடு முறியடிக்கும் - சு.வெங்கடேசன்

    • கார்த்திகை தீபம் ஏற்ற மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
    • இரண்டாம் உலகப்போர் சமயத்தில் இது நிறுத்தப்பட்டது

    திருவண்ணாமலை, ஆறுபடை வீடுகள் உள்பட அனைத்து கோவில்களிலும் கார்த்திகை தீப விழா கொண்டாடப்படுகிறது.

    இந்நிலையில் திருப்பரங்குன்றம் மலை மீது, வழக்கத்திற்கு மாறாக சிக்கந்தர் தர்காவுக்கு அருகில் 15 மீ தொலைவில் உள்ள தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

    திருப்பரங்குன்றம் மலை மீது தீபத்தூணில் ஆண்டாண்டு காலமாக கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வந்ததாகவும் ஆனால், ஆங்கிலேயர் காலத்தில் இரண்டாம் உலகப்போர் சமயத்தில் இது நிறுத்தப்பட்டது என்றும் கூறி இந்துத்துவா அமைப்பை சேர்ந்தவர் அளித்த மனு மீது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    இந்த நிலையில், இதுகுறித்து மதுரை எம்.பி சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

    கார்த்திகை தீபத்தை கலவர தீபமாக மாற்ற மதவெறி சக்திகள் எல்லாவகையிலும் முயலுகிறார்கள். மதவெறி அரசியலை எந்த நாற்காலியில் அமர்ந்து அமல்படுத்தினாலும் அதை முறியடிக்கும் வலிமை தமிழ்நாட்டின் மதச்சார்பற்ற சக்திகளுக்கு உண்டு.

    இந்துத்துவா மதவெறி அரசியலை எதிர்கொள்ள குன்றென நிமிர்ந்து நிற்போம்." என்று கூறியுள்ளார்.

    Next Story
    ×