என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    அனைத்திலும் தமிழ்நாடு தான் LEADER- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
    X

    அனைத்திலும் தமிழ்நாடு தான் LEADER- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    • சங்கராபுரம் மக்களுக்காக ரூ.18 கோடியில் துணை மின் நிலையம் அமைக்கப்படும்.
    • சின்னசேலம் வட்டத்தில் ரூ.3.9 கோடி மதிப்பில் புதிய தீயணைப்புத்துறை கட்டிடம் கட்டப்படும்.

    கள்ளக்குறிச்சியில் புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    இதன்பின்னர் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    இந்தியாவில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கிய மாநிலம் தமிழ்நாடு. கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறோம்.

    சிறந்த பொதுப் போக்குவரத்தைக் கொண்ட மாநிலமாகவும் தமிழ்நாடு தான் இருக்கிறது.

    உளுந்தூர்பேட்டை அருகே சேந்தநாடு பகுதியில் ரூ.10 கோடியில் புதிய சிப்காட் அமைக்கப்படும்.

    சங்கராபுரம் மக்களுக்காக ரூ.18 கோடியில் துணை மின் நிலையம் அமைக்கப்படும்.

    சின்னசேலம் வட்டத்தில் ரூ.3.9 கோடி மதிப்பில் புதிய தீயணைப்புத்துறை கட்டிடம் கட்டப்படும்.

    உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு வழங்கிய முதல் மாநிலம் தமிழ்நாடு.

    கல்லூரி மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் இலவச லேப்டாப் வழங்கப்படுகிறது.

    திமுக அரசின் ஆட்சியில் நிகழ்த்தப்பட்ட சாதனையில் 5 சதவீமாவது அதிமுக ஆட்சியில் இருந்ததா?

    நீங்கள் கண்ணை மூடிக்கொண்டு இருங்கள், நாங்கள் முன்னேறி சென்று கொண்டே இருப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×