என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 10 நாட்கள் வெயில் சுட்டெரிக்கும்- வானிலை ஆய்வாளர்கள் தகவல்
- தமிழகத்தில் கோடை வெப்பம் சுட்டெரித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக கோடை மழை ஆங்காங்கே பெய்து குளிர்வித்தது.
- நேற்று தமிழகத்தில் 7 இடங்களில் வெயில் சதமடித்தது.
சென்னை:
தமிழகத்தில் கோடை வெப்பம் சுட்டெரித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக கோடை மழை ஆங்காங்கே பெய்து குளிர்வித்தது. இந்த நிலையில், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கோடை வெப்பம் கொளுத்தியது. இது, அடுத்த 10 நாட்களுக்கு தொடரும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். நேற்று தமிழகத்தில் 7 இடங்களில் வெயில் சதமடித்தது. அதிகபட்சமாக வேலூர் மாவட்டத்தில் 104.9 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது.
அதன்விவரம் வருமாறு:-
வேலூர் - 104.09 (40.5 செல்சியஸ்)
திருத்தணி - 103.28 டிகிரி (39.6 செல்சியஸ்)
மதுரை விமான நிலையம் - 103.1 டிகிரி (39.5 செல்சியஸ்)
கரூர் பரமத்தி - 102.2 டிகிரி (39 செல்சியஸ்)
மதுரை நகரம் - 102.2 டிகிரி (39 செல்சியஸ்)
திருப்பத்தூர் - 101.66 டிகிரி (38.7 செல்சியஸ்)
ஈரோடு - 100 டிகிரி (38 செல்சியஸ்)
Next Story






