என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்- அமைச்சர் அன்பில் மகேஷ்
- ஆசிரியர்கள் ஊதியம் தொடர்பாக மூவர் குழு விரைவில் அறிக்கை வெளியிட உள்ளது.
- இடைநிலை ஆசிரியர்களின் ஊதியம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டுமென அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து மேலும் கூறிய அவர்," மாணவர்களின் கற்றல் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு முதல்வர் மீது நம்பிக்கை வைத்து போராட்டத்தை கைவிடுங்கள்.
இடைநிலை ஆசிரியர்கள் ஊதியம் தொடர்பாக மூவர் குழு விரைவில் அறிக்கை வெளியிட உள்ளது.
மூவர் குழுவின் அறிக்கையின்படி இடைநிலை ஆசிரியர்களின் ஊதியம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.
பள்ளிக்கு செல்லாமல் இருக்கும் 5,781 ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டுமென அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Next Story






