ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை கைது செய்து இலங்கை கடற்படை அட்டூழியம்

மீனவர்களின் படகையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரு தினங்களுக்கு முன்பு கடிதம் எழுதியிருந்தார்.
ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை கைது செய்து இலங்கை கடற்படை அட்டூழியம்
Published on

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 8 பேரை கைது செய்தும் ஒரு படகை பறிமுதல் செய்தும் இலங்கை கடற்படை அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளது.

சமீப காலமாக அதிகரித்து வரும் தமிழக மீனவர்கள் கைது நடவடிக்கை தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரு தினங்களுக்கு முன்பு கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com