என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சீரடி எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்படும் நேரம் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
- பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் சென்னை சென்டிரல்- சாய் நகர் சீரடி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்படும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- இன்று மற்றும் 28 ஆகிய தேதிகளில் சென்னை சென்டிரலில் இருந்து காலை 11.25 மணிக்கு புறப்பட்டு சாய் நகர் சீரடி செல்லும்.
சென்னை:
சென்னை கோட்டத்தில் பல்வேறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் சென்னை சென்டிரல்- சாய் நகர் சீரடி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்படும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை சென்டிரலில் இருந்து காலை 10.25 மணிக்கு புறப்பட்டு மகாராஷ்டிர மாநிலம் சாய் நகர் சீரடி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.22601), இன்று (புதன்கிழமை) மற்றும் 28 ஆகிய தேதிகளில் சென்னை சென்டிரலில் இருந்து காலை 11.25 மணிக்கு புறப்பட்டு (1 மணி நேரம் தாமதமாக) சாய் நகர் சீரடி செல்லும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story






