என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தமிழகம்-மேற்கு வங்காளம் இடையேயான 3 அம்ரித் பாரத் ரெயில்களுக்கான கால அட்டவணை வெளியீடு
- தமிழகம்-மேற்கு வங்காளம் இடையே 3 அம்ரித் பாரத் ரெயில் சேவை சமீபத்தில் தொடங்கி வைக்கப்பட்டது.
- தாம்பரம்-சந்திரகாச்சி, திருச்சி-நியூ ஜல்பாய்குரி, நாகர்கோவில்-நியூ ஜல்பாய்குரி ஆகிய அம்ரித் பாரத் ரெயில்களுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழகம்-மேற்கு வங்காளம் இடையே 3 அம்ரித் பாரத் ரெயில் சேவை சமீபத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. அதன்படி, தாம்பரம்-சந்திரகாச்சி, திருச்சி-நியூ ஜல்பாய்குரி, நாகர்கோவில்-நியூ ஜல்பாய்குரி ஆகிய அம்ரித் பாரத் ரெயில்களுக்கான கால அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
* தாம்பரத்தில் இருந்து வருகிற 23-ந்தேதி (வெள்ளிக்கிழமை மட்டும்) மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு மேற்குவங்க மாநிலம் சந்திரகாச்சி செல்லும் வாராந்திர அம்ரித் பாரத் ரெயில் (வண்டிஎண்.16107), மறுநாள் இரவு 8.15 மணிக்கு சந்திரகாச்சி சென்றடையும். மறுமார்க்கமாக, சந்திரகாச்சியில் இருந்து வருகிற 24-ந்தேதி (சனிக்கிழமை மட்டும்) இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் வாராந்திர அம்ரித் பாரத் ரெயில் (16108), புறப்பட்டதில் இருந்து 3-வது நாள் காலை 9.15 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இந்த ரெயில்கள் எழும்பூர் வழியாக இயக்கப்படும்.
திருச்சி-நியூ ஜல்பாய்குரி
* திருச்சியில் இருந்து வருகிற 28-ந்தேதி (புதன்கிழமை மட்டும்) காலை 5.45 மணிக்கு புறப்பட்டு மேற்குவங்க மாநிலம் நியூ ஜல்பாய்குரி செல்லும் வாராந்திர அம்ரித் பாரத் ரெயில் (20610), புறப்பட்டத்தில் இருந்து 3-வது நாள் காலை 5 மணிக்கு நியூ ஜல்பாய்குரி சென்றடையும்.
மறுமார்க்கமாக, நியூ ஜல்பாய்குரியில் இருந்து வருகிற 30-ந்தேதி (வெள்ளிக்கிழமை மட்டும்) புறப்பட்டு திருச்சி வரும் வாராந்திர அம்ரித் பாரத் ரெயில் (20609), புறப்பட்டதில் இருந்து 3-வது நாள் மாலை 4.15 மணிக்கு திருச்சி சென்றடையும். இந்த ரெயில்கள் தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், திருப்பாதிரிபுலியூர், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், எழும்பூர், சூலூர்பேட்டை ஆகிய வழித்தடம் வழியாக இயக்கப்படும்.
* நாகர்கோவிலில் இருந்து வருகிற 25-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை மட்டும்) இரவு 11 மணிக்கு புறப்பட்டு நியூ ஜல்பாய்குரி செல்லும் வாராந்திர அம்ரித் பாரத் ரெயில் (20604), புறப்பட்டதில் இருந்த 4-வது நாள் காலை 5 மணிக்கு நியூ ஜல்பாய்குரி சென்றடையும்.
மறுமார்க்கமாக, நியூ ஜல்பாய்குரி வருகிற 28-ந்தேதி (புதன்கிழமை மட்டும்) மாலை 4.45 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் வரும் வாராந்திர அம்ரித் பாரத் ரெயில் (20603), புறப்பட்டதில் இருந்து 3-வது நாள் இரவு 11 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். இந்த ரெயில்கள் நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி ஆகிய வழித்தடம் வழியாக இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






