என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கொடைக்கானலில் பூத்துக்குலுங்கிய அபூர்வ வகை பிரம்ம கமல மலர்
    X

    கொடைக்கானலில் பூத்துக்குலுங்கிய அபூர்வ வகை பிரம்ம கமல மலர்

    • நிஷாகந்தி மலர்கள் பொதுவாக இரவில் மட்டுமே மலரக்கூடிய அரிய வகை மலர்.
    • காய்ச்சல், சளி, மூச்சுக் குழாய் அலர்ஜி மற்றும் ஆஸ்துமா உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் உகார்தே நகர் பகுதியில் ஜான் கென்னடி என்பவர் வீட்டில் பிரம்மகமலம் என்றழைக்கப்படும் நிஷாகந்தி மலர்செடிகளை மாடித்தோட்டத்தில் பல வருடங்களாக வளர்த்து வருகிறார்.

    அரிய வகை பிரம்ம கமலப்பூ நிஷாகந்தி என்று அழைக்கப்படுகிறது. இந்த மலர்களின் செடிகள் கள்ளிச்செடி இனத்தை சேர்ந்தவை ஆகும். இவற்றின் தண்டுகளை வெட்டி வைத்தாலே வளரக்கூடிய தன்மை உடையது.

    நிஷாகந்தி மலர்கள் வெண்ணிற வண்ணத்தில் 3 இதழ்களை கொண்டதாகவும் மிகவும் அழகாகவும் இருக்கும். மலரும் பொழுது சுமார் 10 மீட்டர் சுற்றளவு பூவின் நறுமணம் இருக்கும்.

    நிஷாகந்தி மலர்கள் பொதுவாக இரவில் மட்டுமே மலரக்கூடிய அரிய வகை மலர். மலர்ந்த சில மணி நேரங்களில் குவிந்து மொட்டுகள் போல் காட்சி அளிக்கும். மலர்ந்த சில மணி நேரங்களில் பலர் விளக்கேற்றி வழிபடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் நிஷாகந்தி மலர்கள் மருத்துவ குணம் கொண்டது என்று கூறப்படுகிறது. காய்ச்சல், சளி, மூச்சுக் குழாய் அலர்ஜி மற்றும் ஆஸ்துமா உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

    கொடைக்கானலில் உகார்தே நகர் பகுதியில் வசிக்கும் ஜான் கென்னடி வீட்டில் மாடி தோட்டத்தில் மலர்ந்திருக்கும் நிஷாகந்தி பூக்களை அப்பகுதியை சுற்றியுள்ள மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ரசித்து புகைப்படம் எடுத்து சென்றனர்.

    Next Story
    ×