என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

குழந்தையை கொஞ்சியபடி தாலாட்டு பாடிய ராமதாஸ்.
'தாலாட்டு' பாடிய ராமதாஸ்- சமூக வலைதளங்களில் வைரலாக பரவும் வீடியோ
- அரசியல் விஷயங்கள் எல்லாம் போக, போக தெரியும்.
- தாலாட்டு பாடல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கடலூர்:
கடலூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசிடம், டாக்டர் அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த டாக்டர் ராமதாஸ், போக, போக தெரியும் என்று கூறினார். தொடர்ந்து அவர் கூறுகையில், நான் அரசியல் வியாதியும் அல்ல, அரசியல்வாதியும் அல்ல. சமூக சீர்திருத்தவாதி என்றார்.
முன்னதாக கடலூர் அருகே ராமாபுரத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், டாக்டர் அன்புமணி பற்றிய கேள்விக்கு, சொல்வதற்கு ஏதும் இல்லை. எதுவும் இல்லை. அரசியல் விஷயங்கள் எல்லாம் போக, போக தெரியும். எதுவும் சொல்லக்கூடாது என்றார்.
அதைத்தொடர்ந்து பா.ம.க. மாவட்ட செயலாளர் கோபிநாத் வீட்டுக்கு சென்ற அவர் அவரது இரட்டை குழந்தைகளில், ஒன்றை எடுத்து கொஞ்சியபடி தாலாட்டு பாடினார். காலை எழும் சூரியனே , ஆராரோ, ஆரிராரோ என்று பாடினார்.
இந்த தாலாட்டு பாடல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.






