என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    யாரும் என்னை பார்க்க வர வேண்டாம்- ராமதாஸ் வேண்டுகோள்
    X

    யாரும் என்னை பார்க்க வர வேண்டாம்- ராமதாஸ் வேண்டுகோள்

    • ராமதாசை சமாதானப்படுத்தும் முயற்சியில் பா.ம.க. நிர்வாகிகள், குடும்பத்தினர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
    • பாட்டாளி மக்கள் கட்சி மிகுந்த வலிமையாக செயல்படும்.

    திண்டிவனம்:

    பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் நேற்று முன்தினம் திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கட்சியின் நிறுவனரான நானே கட்சியின் தலைவராக செயல்படுவேன். கட்சியின் தலைவராக இருக்கும் அப்புமணி ராமதாஸ் கட்சியின் செயல் தலைவராக செயல்படுவார் என ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

    இந்த தகவல் பா.ம.க.வினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராமதாசை சமாதானப்படுத்தும் முயற்சியில் பா.ம.க. நிர்வாகிகள், குடும்பத்தினர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

    நேற்று கட்சியின் கவுரவ தலைவர் ஜி.கே.மணி தைலாபுரம் தோட்டத்துக்கு வந்து டாக்டர் ராமதாசை சந்தித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒவ்வொரு கட்சியிலும் இது போன்ற ஒரு இயல்பு வரும். மாற்றங்கள் வரும். எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

    இருவரும் ஒற்றுமையாக இருந்து செயல்படுவார்கள். பாட்டாளி மக்கள் கட்சி மிகுந்த வலிமையாக செயல்படும். கட்சிக்கு என்று ஒரு தனித்தன்மை உள்ளது. அதை இழக்க மாட்டோம். ஒற்றுமையாக இருக்க வேண்டிய எல்லாவற்றையும் செய்வோம்.

    அது நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இதற்காக இருவரையும் சந்தித்து பேசுவேன். மிக விரைவில் நல்ல அறிவிப்பு வரும். இந்த சலசலப்பு மிக விரைவில் சரியாகும் என்றார்.

    இந்த நிலையில் டாக்டர் ராமதாஸ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் யாரும் என்னை பார்க்க வர வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    Next Story
    ×