என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

புரோகிதர்கள் திருமணத்தில் NCC கமாண்ட் போல மந்திரம் சொல்கிறார்கள்- அமைச்சர் பொன்முடி
- திருமணத்தை ஒரு அவாள் வந்து நடத்தி வைத்தால்.. புரியாத மொழியில் பேசுவார்கள்
- இந்த திருமணத்தில் எல்லோரும் தமிழில் வாழ்த்துகிறோம்
தூத்துக்குடி எம்.பி. கனிமொழி, விழுப்புரத்தில் நடைபெற்ற திமுக மாநில மகளிரணி பிரச்சாரக்குழுச் செயலாளர் தேன்மொழி அவர்களின் இல்லத் திருமண நிகழ்வில் கலந்து கொண்டு, மணமக்கள் ரூபன்சாந்தகுமார் - அனுபிரியா தம்பதியரை வாழ்த்தினார்.
இந்த திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் பொன்முடி, "இந்த திருமணத்தை ஒரு அவாள் வந்து நடத்தி வைத்தால்.. புரியாத மொழியில் பேசுவார்கள்.. அது மந்திரம் அல்ல, என்.சி.சி. யில் சொல்லும் இந்தி கமாண்ட். அம்மாதிரி இல்லாமல் இப்போது எல்லோரும் தமிழில் வாழ்த்துகிறோம்" என்று நகைச்சுவையாக தெரிவித்தார்.
Next Story






