என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தூய்மை பணியாளர்கள் போராட்ட களத்தில் போலீசார் குவிப்பு: பதற்றமான சூழல்..!
- தூய்மை பணியை தனியாருக்கு கொடுத்ததை எதிர்த்து போராட்டம்.
- கடந்த 14 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
சென்னையில் உள்ள இரண்டு மண்டல (5 மற்றும் 6) தூய்மை பணிகளை தனியாருக்கு விட்டதை எதிர்த்து தூய்மை பணியாளர்கள் ரிப்பன் மாளிகையில் கடந்த 14 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் அமைச்சர் சேகர்பாபு, கே.என். நேரு, மேயர் பிரியா உள்ளிட்டோர் தூய்மை பணியாளர்கள் போராட்டக்குழு பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.
இதனைத் தொடர்ந்து போராட்டம் தொடரும் என போராட்டக்குழு அறிவித்தது. இந்த நிலையில் போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
Next Story






