நாளை 5 புதிய ரெயில் சேவைகளை தொடங்கி வைக்கிறார் #PMModi

30 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட மேடை மற்றும் திடல் அமைக்கப்பட்டுள்ளது. பிரசார பொதுக் கூட்டத்திற்கு முன்பாக அதே பகுதியில் மத்திய அரசு விழா நடக்கிறது.
நாளை 5 புதிய ரெயில் சேவைகளை தொடங்கி வைக்கிறார் #PMModi
Published on

திருச்சி:

தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரசார பொதுக்கூட்டம் திருச்சியில் நாளை நடைபெறுகிறது. இதில் தமிழகத்தில் மூன்றாவது முறையாக பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். மேலும் கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்கிறார்கள்.

இதற்காக திருச்சி பஞ்சப்பூரில் இடம் தேர்வு செய்யப்பட்டு 30 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட மேடை மற்றும் திடல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பிரசார பொதுக் கூட்டத்திற்கு முன்பாக அதே பகுதியில் மத்திய அரசு விழா நடக்கிறது.

மத்திய அரசு விழாவில் பங்கேற்கும் பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கான 5 புதிய ரெயில் சேவைகளை தொடங்கி வைக்க உள்ளார். அந்த வகையில் நாளை நெல்லை- மங்களூரு எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரம்- மங்களூரு எக்ஸ்பிரஸ், மயிலாடுதுறை- காரைக்குடி, நாகர்கோவில்- சாரளப்பள்ளி அம்ரித் பாரத், கோவை- தன்பாத் அம்ரித் பாரத் ரெயில் ஆகிய ரெயில் சேவைகளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். 

X

Maalai Malar
www.maalaimalar.com