என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பிளஸ் 2 தேர்வில் இரு கைகளையும் இழந்த மாற்றுத்திறனாளி மாணவர் 471 மதிப்பெண்கள் பெற்று அசத்தல்
- பிளஸ்-2 தேர்வில் மாணவிகள் 96.70 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
- 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 437 மதிப்பெண்கள் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிருஷ்ணகிரி:
தமிழகம் முழுவதும் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. தேர்வு எழுதிய 7 லட்சத்து 92 ஆயிரத்து 494 மாணவ-மாணவிகளில் 7 லட்சத்து 53 ஆயிரத்து 142 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 95.03 சதவீதம் ஆகும்.
தேர்வு எழுதிய 3 லட்சத்து 73 ஆயிரத்து 178 மாணவர்களில் 3 லட்சத்து 47 ஆயிரத்து 670 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அது போல தேர்வு எழுதிய 4 லட்சத்து 19 ஆயிரத்து 316 மாணவிகளில் 4 லட்சத்து 5 ஆயிரத்து 472 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பிளஸ்-2 தேர்வில் மாணவிகள் 96.70 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 93.16 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். வழக்கம் போல மாணவர்களை விட மாணவிகள் தான் அதிகம் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு மாணவர்களை விட மாணவிகள் 3.54 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த மாணவி ஓவியஞ்சலி 600-க்கு 599 மதிப்பெண் பெற்றுள்ளார்.
கிருஷ்ணகிரி அரசு பள்ளியில் பயின்ற மாற்றுத்திறனாளி மாணவர் கீர்த்தி வர்மா 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 471 மதிப்பெண்கள் பெற்று அசத்தி உள்ளார். இரு கைகளையும் இழந்த இவர் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 437 மதிப்பெண்கள் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






