என் மலர்
தமிழ்நாடு
த.வெ.க. மாநாடு - வீடியோ வெளியிட்டார் விஜய்
- பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர் என்று தகவல்.
- மாநாட்டில் விஜய் பேசிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு கடந்த மாதம் 27 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்தை அடுத்த விக்கிரவாண்டி வி சாலையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கிட்டத்தட்ட பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர் என்று தகவல்கள் வெளியாகி வந்தன.
த.வெ.க. மாநாடு நடைபெற்று இன்றுடன் (நவம்பர் 27) ஒரு மாதம் நிறைவடைவதை ஒட்டி அக்கட்சி தலைவர் விஜய் மாநாட்டு வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். 3.15 நிமிடங்கள் ஓடும் வீடியோவில் மாநாட்டிற்கான பந்தக்கால் வைக்கும் நிகழ்ச்சியின் காட்சிகள், மேடை அமைக்கும் பணிகள், மாநாட்டில் விஜய் பேசிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இத்துடன் த.வெ.க. கட்சியின் பாடல் வீடியோவின் பின்னணியில் ஒலிக்கிறது. வெற்றிக் கொள்கை மாநாட்டின் ஒரு மாத நிறைவை ஒட்டி வெளியிடப்பட்டு இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.