என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கேரள எல்லையில் நிறுத்தப்பட்ட ஆம்னி பேருந்துகள் - பயணிகள் வாக்குவாதம்
- கேரளாவுக்கு ஆம்னி பேருந்துகளை இயக்கப் போவதில்லை என ஆம்னி பேருந்து சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.
- தமிழகத்தில் இருந்து கேரளா சென்ற 30-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் சிறைபிடித்து ரூ.70 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
தமிழகத்தில் இருந்து கேரளா சென்ற 30-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் சிறைபிடித்து ரூ.70 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதையடுத்து தமிழகத்தில் இருந்து கேரளா நோக்கி பயணிகளுடன் சென்ற ஆம்னி பேருந்துகள் தமிழக - கேரள எல்லையான வாளையார் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டன.
தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு ஆம்னி பேருந்துகளை இயக்கப் போவதில்லை என ஆம்னி பேருந்து சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.
தமிழக-கேரள அதிகாரிகள் பேசி பொதுப் போக்குவரத்து பிரச்சனைக்கு முடிவெடுக்க ஆம்னி பேருந்து சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆம்னி பேருந்து இயக்கப்படாததால் ஓட்டுநர்களுடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கேரளாவிற்குள் சென்றால் தங்களது பேருந்து பறிமுதல் செய்யப்படலாம் என அச்சம் காரணமாக ஆம்னி பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. கேரள போக்குவரத்து துறையால் லட்சக்கணக்கில் அபராதம் விதிக்கப்படுவதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.






