என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பாஜக கூட்டணியில் இருந்து ஓ. பன்னீர்செல்வம் விலகல்
- தமிழ்நாடு முழுவதும் ஓ.பன்னீர்செல்வம் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
- தற்போது வரை எந்த கட்சியுடனும் கூட்டணியில் இல்லை.
சென்னை:
சென்னை ஆழ்வார்பேட்டையில் ஆதரவாளர்களுடன் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார். இதன்பின் பண்ருட்டி ராமச்சந்திரன், ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியதாவது:-
* இன்று காலை முதல் நடைபெற்ற ஆலோசனையில் 3 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.
* தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தொண்டர்கள் உரிமை மீட்பு குழு விலகுகிறது.
* தமிழ்நாடு முழுவதும் ஓ.பன்னீர்செல்வம் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
* தற்போது வரை எந்த கட்சியுடனும் கூட்டணியில் இல்லை என்றார்.
எதிர்கால கூட்டணி குறித்து காலசூழலுக்கு ஏற்ப முடிவு என ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
Next Story






