என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

எம்.ஜி.ஆர். இருந்த தாய்க் கழகத்திற்குதான் ஓ. பன்னீர் செல்வம் திரும்பியிருக்கிறார்: #MKStalin பேச்சு
- நிதிஷ்குமாருக்கு நடந்ததுதான் தமிழ்நாடில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்
- எடப்பாடி பழனிசாமிக்கு பதில் அதிமுக பொதுச்செயலாளராக வேறு ஒருவரை இப்போதே பாஜக தேர்வு செய்துவிட்டது.
ஓ. பன்னீர் செல்வம் சில தினங்களுக்கு முன்பாக மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக-வில் இணைந்தார். இன்று அவருடைய ஆதரவாளர்கள் திமுக-வில் இணையும் பிரமாண்ட விழா மதுரை திருமங்கலத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:-
* மதுரை மக்களின் நீண்டகால கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது
* திமுக தான் வெற்றி பெறும் என பாஜக-வே நினைக்கிறது.
* திமுக கூட்டணியில் விரிசல் வராதா? என ஏங்கி கொண்டிருந்தனர்"
* நிதிஷ்குமாருக்கு நடந்ததுதான் தமிழ்நாடில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்
* எடப்பாடி பழனிசாமிக்கு பதில் அதிமுக பொதுச்செயலாளராக வேறு ஒருவரை இப்போதே பாஜக தேர்வு செய்துவிட்டது. தேர்தலுக்கு பின்னர் எடப்பாடி பழனிசாமி மாற்றப்படுவார்
* பாஜக ஆதரவு செயல்பாட்டால் அதிமுக தலைமையின் மீது அதன் தொண்டர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் தாய்க்கழகமாம் திமுக-வை நோக்கி திரும்பி வருகின்றனர்.
* எம்ஜிஆர் இருந்த தாய்க் கழகத்திற்குதான் ஓ. பன்னீர் செல்வம் திரும்பியிருக்கிறார்.
* இந்த மேடையில்தான் இருப்பேன் என்பதை ஓ.பி.எஸ். சில ஆண்டுகளுக்கு முன்பு நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்
* மகளிர் தினப் பரிசாக கேஸ் சிலிண்டர் விலையை உயர்த்தியுள்ளது மத்திய அரசு
இவ்வாறு மு.க. ஸ்டாலின் பேசினார்.






