என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கடலூரில் 17.4 செ.மீ மழை பதிவு
    X

    தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கடலூரில் 17.4 செ.மீ மழை பதிவு

    • புதுச்சேரி மாநிலம் காலாப்பேட்டையில் 25 செ.மீ., ராணிப்பேட்டை மாவட்டம் கலவையில் 10 செ.மீ., பதிவாகி உள்ளது.
    • சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் சராசரியாக 5.6 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனை தொடர்ந்து இன்று செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது.

    அதன்படி, பெரும்பாலான மாவட்டங்களில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கும், 12 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், தமிழ்நாட்டில் கடந்த 21 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூரில் 17.4 செ.மீ. மிக கனமழை பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    புதுச்சேரி மாநிலம் காலாப்பேட்டையில் 25 செ.மீ., ராணிப்பேட்டை மாவட்டம் கலவையில் 10 செ.மீ., பதிவாகி உள்ளது.

    சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் சராசரியாக 5.6 செ.மீ மழை பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக நுங்கம்பாக்கத்தில் 9 செ.மீ, அம்பத்தூரில் 7 செ.மீ. மழை பதிவானது.

    Next Story
    ×