என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பட்டாபிராமில் புதிய டைடல் பூங்கா- முதலமைச்சர் திறந்து வைத்தார்
    X

    பட்டாபிராமில் புதிய டைடல் பூங்கா- முதலமைச்சர் திறந்து வைத்தார்

    • 24 மணிநேர பாதுகாப்பு வசதிகள், உணவகம் மற்றும் உடற்பயிற்சி கூடம் போன்ற அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
    • 6 ஆயிரம் தகவல் தொழில்நுட்ப வல்லுனர்கள் பணிபுரியும் வகையிலும் பசுமை கட்டிடம் வழிமுறைகளின்படியும் இக்கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டின் வடபகுதியில் உள்ள நகரங்களுக்கு தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை கொண்டு செல்லும் நோக்கத்துடன் திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராமில் 11.41 ஏக்கர் பரப்பளவில் ரூ.330 கோடி செலவில் தரை மற்றும் 21 தளங்களுடன் 5.57 லட்சம் சதுரடி பரப்பளவில் டைடல் பூங்கா கட்டப்பட்டு உள்ளது.

    இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இக்கட்டிடத்தில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்பட தேவையான, நவீன தொலைத்தொடர்பு வசதிகள், தடையற்ற உயரழுத்த மும்முனை மின் இணைப்பு மற்றும் மின் இயக்கி வசதிகள், மின்தூக்கி வசதிகள், சுகாதார வசதிகள், தீ பாதுகாப்பு மற்றும் கட்டிட மேலாண்மை வசதிகள், கண்காணிப்பு கேமரா வசதிகள், 24 மணிநேர பாதுகாப்பு வசதிகள், உணவகம் மற்றும் உடற்பயிற்சி கூடம் போன்ற அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

    6 ஆயிரம் தகவல் தொழில்நுட்ப வல்லுனர்கள் பணிபுரியும் வகையிலும் பசுமை கட்டிடம் வழிமுறைகளின்படியும் இக்கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. பட்டாபிராமில் இப்புதிய டைடல் பூங்கா அமைக்கப்படுவதன் மூலம் தமிழ்நாட்டின் வடபகுதியைச் சார்ந்த குறிப்பாக திருவள்ளூர் உள்ளிட்ட சுற்றுவட்டார மாவட்டங்களில் உள்ள படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவதுடன் அந்த மாவட்டங்களின் சமூக பொருளாதார நிலையும் மேம்படும்.

    Next Story
    ×