என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பேச்சுவார்த்தை தோல்வி: போராட்டம் 100 சதவீதம் தொடருவதாக தூய்மை பணியாளர்கள் அறிவிப்பு..!
- எங்களுடைய போராட்டம் 100 சதவீதம் உறுதியாக தொடர்கிறது.
- நாங்கள் போராட்டத்தில் நிற்கிறோம். முடிந்தால் அப்புறப்படுத்தட்டும்.
சென்னையில் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அவர்களை அப்புறப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் இன்று சென்னை ரிப்பன் மாளிகையில் அமைச்சர் சேகர்பாபு, கே.என். நேரு, மேயர் பிரியா, ஆணையர் உள்ளிட்டோர் தூய்மைப் பணியாளர்கள் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாமல் தோல்வியில் முடிவடைந்தது. போராட்டம் தொடரும் என தூய்மைப் பணியாளர்கள் போராட்டக்குழு அறிவித்துள்ளது.
எங்களுடைய போராட்டம் 100 சதவீதம் உறுதியாக தொடர்கிறது. முதலமைச்சர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். கோரிக்கை ஏற்பது என்றால்தான் அடுத்தக்கட்ட பேச்சுவாத்த்தை எனத் தெரிவித்துள்ளது. நாங்கள் போராட்டத்தில் நிற்கிறோம். முடிந்தால் அப்புறப்படுத்தட்டும் எனத் தெரிவித்துள்ளது.
Next Story






