என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மசூலிப்பட்டினம் அருகே தீவிர புயலாக கரையைக் கடக்கும் 'மோன்தா'
- வருகிற 28-ந்தேதி மாலை மோன்தா புயல் கரையைக் கடக்கும்.
- சென்னையில் இருந்து 970 கி.மீ. தொலைவில் புயல் சின்னமானது நிலை கொண்டுள்ளது.
சென்னை:
வங்கக்கடலில் நாளை மறுநாள் உருவாகும் மோன்தா புயல் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்த வானிலை ஆய்வு மையம் புயலின் நகர்வை பொறுத்து கரையைக்கடப்பது குறித்து கணிக்கப்படும் என தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், 'மோன்தா' புயல் ஆந்திராவின் மசூலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினம் இடையே தீவிர புயலாக கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதன்படி, வருகிற 28-ந்தேதி மாலை மோன்தா புயல் கரையைக் கடக்கும். அச்சமயத்தில் 90 முதல் 100 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 110 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தற்போது சென்னையில் இருந்து 970 கி.மீ. தொலைவில் புயல் சின்னமானது நிலை கொண்டுள்ளது.
Next Story






