என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மு.க. ஸ்டாலினின் ஆஸ்தான கொத்தடிமை, ஒட்டுண்ணி: அமைச்சர் ரகுபதியை கடுமையாக விமர்சித்த அதிமுக
    X

    மு.க. ஸ்டாலினின் ஆஸ்தான கொத்தடிமை, ஒட்டுண்ணி: அமைச்சர் ரகுபதியை கடுமையாக விமர்சித்த அதிமுக

    • ரகுபதிக்கு கொஞ்சமும் கூச்சம் இல்லை. அஇஅதிமுக-விடம் எத்தனை அடி வாங்கினாலும்,
    • "இன்னும் கொஞ்சம் அடியுங்களேன்" என்று Wanted-ஆக வண்டியில் ஏறுவதே இந்த ஒட்டுண்ணியின் வேலையாக மாறிவிட்டது.

    அதிமுக சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பதிலடி, பொம்மை முதல்வரை கதற விட்டிருக்கிறது போலும். வழக்கம்போல தனது ஆஸ்தான கொத்தடிமை ரகுபதியை ஏவிவிட்டு, பதில் தருகிறேன் என்ற பெயரில் புலம்பித் தள்ளியுள்ளார்.

    ரகுபதிக்கு கொஞ்சமும் கூச்சம் இல்லை. அஇஅதிமுக-விடம் எத்தனை அடி வாங்கினாலும், "இன்னும் கொஞ்சம் அடியுங்களேன்" என்று Wanted-ஆக வண்டியில் ஏறுவதே இந்த ஒட்டுண்ணியின் வேலையாக மாறிவிட்டது.

    கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு பெயர் மட்டும்தான் வைத்தோமாம். எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைத்தான் தற்போது மு.க. ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார் என்பது கூட தெரியாத மக்கு மந்திரிதான் ரகுபதி.

    எடப்பாடி பழனிசாமியின் பதிவில், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரியைப் பற்றி பேசியதை Convenient-ஆக மறந்துவிட்டீர்களே ஒட்டுண்ணி ரகுபதி?

    உங்கள் ஆட்சியின் கையாலாகாத்தனத்தால், கள்ளச்சாராயம் குடித்து 68 பேர் பரிதாபமாக உயிரிழந்த போது நீங்களோ, உங்கள் பொம்மை முதல்வரோ கள்ளக்குறிச்சி பக்கம் கால் வைத்தீர்களா? அந்த தைரியம் உங்களுக்கு இருந்ததா? அப்போதெல்லாம் பங்கருக்குள் ஓடி ஒளிந்துகொண்டு, இப்போது தேர்தல் ஜூரத்தில் மேடை போட்டு காலரைத் தூக்க உங்களுக்கு எல்லாம் கொஞ்சம் கூட வெட்கமாக இல்லையா?

    அஇஅதிமுக ஆட்சியால் கட்டப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முதல், சேலம் புதுப்பிக்கப்பட்ட பேருந்து நிலையம் வரை கருணாநிதி பெயரைக் கூச்சமின்றி ஸ்டிக்கர் ஒட்டிய கொத்தடிமைக் கூட்டமெல்லாம், எங்களைப் பற்றி பேசுவதா?

    இன்றைய தினம் இடைநிலை ஆசிரியர்கள் போராடுவது யாரால்?

    தேர்தல் வாக்குறுதி எண்- 311-ஐ நிறைவேற்றாத உங்களால் தானே?

    செவிலியர்கள் போராடுவது யாரால்?

    தேர்தல் வாக்குறுதி எண் 356-ஐ நிறைவேற்றாத உங்களால் தானே?

    தூய்மைப் பணியாளர்கள் போராடுவது யாரால்?

    கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக-வால் தானே?

    அரசு ஊழியர்கள் போராட்டம் யாரால்?

    "பழைய ஓய்வூதிய திட்டம்" (வாக்குறுதி எண்: 309) என்று வாய்கிழிய பேசிவிட்டு, ஆட்சிக்கு வந்ததும் மாற்றிப் பேசும் உங்களால்தானே?

    அது சரி, வேட்டியை மாற்றியதும் கொள்கையைத் தூக்கி எறிந்துவிட்டு, கொத்தடிமையாக மாறிய மங்குனி அமைச்சர் ரகுபதி போன்றோர் இருக்கும் கட்சிதானே திமுக? இவர்கள் நடத்தும் விடியா ஆட்சி வேறெந்த லட்சணத்தில் இருக்கும்?

    ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளக்கூட முடியாத, மாஸ்க் அணிந்துகொண்டு வாழ்ந்த கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் லேப்டாப் கொடுக்கவில்லை என்று ரகுபதி கேட்பதெல்லாம், திமுக என்ற மங்குனிகளின் கூடாரம் எவ்வளவு பெரிய முட்டாள்களை வைத்திருக்கிறது என்பதையே காட்டுகிறது.

    "வாக்குறுதி கொடுத்தால் நிறைவேற்ற வேண்டுமா?" என்கிறார் அமைச்சர் மா.சு. "5 ஆண்டுகள் ஆகும் போதுதான் நிறைவேற்றுவோம்" என்கிறார் ரகுபதி. நாங்கள் கேட்கிறோம்- உங்களுக்கெல்லாம் மனசாட்சி என்பதே இல்லையா?

    2025 கடைசியில் வந்து, கல்லூரி கடைசி ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் லேப்டாப் கொடுக்கிறீர்களே... 2021-22, 2022-23, 2023-24, 2024-25 என இத்தனை கல்வியாண்டுகள் லேப்டாப் கிடைக்காமல் போன அரசுப்பள்ளி, கல்லூரி மாணவர்கள் பாவம் இல்லையா? லேப்டாப் கிடைக்காத தற்போதைய கல்வியாண்டு அரசுப்பள்ளி மாணவர்கள் என்ன கிள்ளுக்கீரையா?

    ஒரு பொறுப்புள்ள அரசியல்வாதி பேசும் பேச்சா இதெல்லாம்? இவருக்கெல்லாம் சட்ட அமைச்சர் என்ற பொறுப்பு வேறு- வெட்கக்கேடு!

    சீனியர் கொத்தடிமை ரகுபதி அவர்களே- உங்கள் தலைவருக்கு, அதான்.. அந்த ஒன்றும் தெரியாத பொம்மை முதல்வருக்கு.. தெம்பு, திராணி, வக்கு, வகையிருந்தால் சட்டப்பேரவையை முழுமையாக நேரலையில் காட்டச் சொல்லுங்கள். நேருக்கு நேர் நின்று பேசுவது யார், சபாநாயகருக்கு பின்னால் ஒளிந்து கொள்ளும் தொடைநடுங்கி பொம்மை யார் என்பதை தமிழக மக்களும் பார்த்து ரசிப்பார்கள்! சிரிப்பார்கள்!

    இவர்தான் இப்படி என்றால், ஸ்டாலினின் தங்கையான கனிமொழியோ, "எடப்பாடியாருடன் விவாதம் செய்ய ஸ்டாலினுக்கு நேரம் இல்லை" என்று ஒரு பதிலைக் கொடுத்துள்ளார்.

    வாக்கிங் போக, போட்டோஷூட் எடுக்க, சினிமா பார்க்க, அதற்கு ரிவ்யூ எழுத, இன்பச் சுற்றுலா போக என இதற்கெல்லாம் நேரம் இருக்கும் பொம்மை முதல்வருக்கு, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரின் கேள்விகளுக்கு நேருக்கு நேர் நின்று பதில் சொல்ல மட்டும் நேரம் இல்லையோ?

    அப்படியே நேரம் இல்லாதவர்தான் என்றால், அப்புறம் எதுக்கு OPEN CHALLENGE என்று வாய் சவடால் விட்டுக்கொண்டு இருக்கிறார் உங்கள் அண்ணன்?

    அவ்ளோ பயம் இருக்குல்ல...

    அதை அப்படியே Maintain பண்ணுங்க!

    இவ்வாறு அதிமுக கடுமையாக சாடியுள்ளது.

    Next Story
    ×