என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    CLAT தேர்வில் முதலிடம் பிடித்த மலைவாழ் மாணவர் - மு.க.ஸ்டாலின் வாழ்த்து
    X

    CLAT தேர்வில் முதலிடம் பிடித்த மலைவாழ் மாணவர் - மு.க.ஸ்டாலின் வாழ்த்து

    • மலைவாழ் மாணவர் பரத் பொது சட்ட நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.
    • தம்பி பரத் சட்டம் பயின்று தன் அறிவொளியை இந்தச் சமூகத்துக்கு வழங்கிட வேண்டும் என வாழ்த்துகிறேன்.

    திருச்சி மாவட்டம் பச்சைமலை தோனூர் மலைக்கிராமத்தை சேர்ந்த மலைவாழ் மாணவர் பரத் பொது சட்ட நுழைவுத்தேர்வில் (CLAT) வெற்றி பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

    பச்சைமலை பகுதியில் CLAT தேர்வில் வெற்றி பெற்று, தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயில தகுதி பெறும் முதல் பழங்குடியின மாணவர் என்ற சாதனையை பரத் படைத்துள்ளார்.

    CLAT தேர்வில் முதலிடம் பிடித்த மாணவன் பரத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

    உள்ளம் உவகையில் நிறைகிறது.

    தம்பி பரத் சட்டம் பயின்று தன் அறிவொளியை இந்தச் சமூகத்துக்கு வழங்கிட வேண்டும் என வாழ்த்துகிறேன். அவரது சட்டப் படிப்புக்குத் தி.மு.க. சட்டத்துறை துணை நின்று அவரை வழிநடத்தும் என்று தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×