என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கஷ்டப்படாமல் கிடைக்கும் எதுவும் நிலைக்காது - ரஜினி பட வசனத்தை பேசிய மு.க.ஸ்டாலின்
    X

    கஷ்டப்படாமல் கிடைக்கும் எதுவும் நிலைக்காது - ரஜினி பட வசனத்தை பேசிய மு.க.ஸ்டாலின்

    • படிப்பு என்பது தான் பெண்களுக்கான சிறந்த அணிகலன்.
    • 16 வயதிற்கு மேற்பட்ட சிறுமிகளுக்கு கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி போடும் திட்டம் தமிழ்நாட்டில் மட்டும்தான் உள்ளது.

    சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மகளிர் கிறிஸ்துவக் கல்லூரியில் நடைபெறும் பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * கல்வி தான் பெண்களுக்கு அழகு சேர்க்கும்.

    * பெண்கள் என்றாலே அழகு தான், அப்படிப்பட்ட பெண்ணுக்கு அறிவு தான் அழகு.

    * படிப்பு என்பது தான் பெண்களுக்கான சிறந்த அணிகலன்.

    * தமிழகம் உலக நாடுகளுடன் போட்டியிடும் அளவிற்கு உயர கல்விதான் காரணம்.

    * தமிழ்நாடு கல்வியில் சிறந்து விளங்குவதால் தான் உலக நாடுகளுடன் தமிழ்நாடு போட்டியிடுகிறது.

    * பெண்களின் வளர்ச்சி ஒரு குடும்பத்தின் வளர்ச்சி மட்டுமல்ல அது நாட்டின் வளர்ச்சி.

    * நாட்டிலேயே வறுமை குறைந்த மாநிலம் என்ற பெருமையை தமிழ்நாடு பெற்றுள்ளது.

    * வெற்றிக்கு கடின உழைப்பு தேவை. கஷ்டப்படாமல் எதுவும் கிடைக்காது. கஷ்டப்படாமல் கிடைக்கும் எதுவும் நிலைக்காது.

    * 16 வயதிற்கு மேற்பட்ட சிறுமிகளுக்கு கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி போடும் திட்டம் தமிழ்நாட்டில் மட்டும்தான் உள்ளது.

    * ரூ.14,000 மதிப்புள்ள கருப்பை வாய் தடுப்பூசியை தமிழ்நாடு நமது சிறுமிகளுக்கு இலவசமாக வழங்குகிறது.

    * நீங்கள் அனைவரும் எனக்கு மகள்கள் தான்.

    * பெற்றோர் உங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றுங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×