என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

இளைஞர்களுக்கான அரசு திராவிட மாடல் அரசு - மு.க.ஸ்டாலின்
- என்னை நம்பி பொறுப்பை ஒப்படைத்த தமிழக மக்களுக்கு இந்த வளர்ச்சியை காணிக்கை ஆக்குகிறேன்.
- 4 ஆண்டுகளில் 6.41 லட்சம் பேர் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2,538 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கினார். உதவிப்பொறியாளர், நகரமைப்பு அலுவலர், இளநிலை பொறியாளர்கள் உள்ளிட்ட பணிகளுக்கு தேர்வானோருக்கு நியமன ஆணைகளை வழங்கி முதலமைச்சர் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* இளைஞர்கள் தான் தமிழ் சமூகத்தின் அடித்தளமாக உள்ளனர்.
* திராவிட மாடல் அரசு என்பது இளைஞர்களுக்கான அரசு.
* தமிழகத்தின் வளர்ச்சி என்பது அனைத்து துறை கூட்டு முயற்சியால் கிடைத்துள்ளது. அனைவருக்கும் நன்றி.
* என்னை நம்பி பொறுப்பை ஒப்படைத்த தமிழக மக்களுக்கு இந்த வளர்ச்சியை காணிக்கை ஆக்குகிறேன்.
* இது சாதாரண வெற்றியல்ல, நெருக்கடி, அவதூறுகளுக்கு இடையே நாம் அடைந்த சாதனை.
* தேர்வாணையம், பொதுத்துறைகள் மூலமாக 1.35 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.
* நான் முதல்வன் திட்டத்தின் மூலம் 89 இளைஞர்கள் மத்திய அரசில் முக்கிய பணியில் உள்ளனர்.
* கல்வி கொடுத்தால் மட்டும் போதாது, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தரும் நோக்கிலும் திட்டமிட்டு செயலாற்றுகிறோம்.
* 4 ஆண்டுகளில் 6.41 லட்சம் பேர் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
* நகராட்சி உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது.
* நான் முதல்வன் திட்டத்தில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கும் வேலைவாய்ப்பு வழங்கி உள்ளோம்.
* தொழிலாளர் நலத்துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் 2 லட்சத்திற்கு மேற்பட்டோருக்கு விளையாட்டு துறை மூலம் 84 பேருக்கு வேலை கிடைத்துள்ளது.
* அமைதியான சூழல், சிறப்பான சட்டம் ஒழுங்கு, திறமையான இளைஞர்கள் காரணமாக நாட்டில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.






